அந்த எம்ஜிஆர் பாட்டுத்தான் ஞாபகம் வருது!.. என்ன விஜய் சாரே.. புஸ்ஸி ஆனந்தே இப்படி ஏழரையை கூட்டுறாரே!
சென்னை: "தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு" என எம்ஜிஆர் அப்பவே பாடி வச்சுட்டார். எம்ஜிஆர் வழியில் ஹீரோவில் இருந்து சிஎம் ஆகும் கனவுடன் காத்திருக்கும் நடிகர் விஜய்யும் மற்ற அரசியல்வாதிகளை போல தன்னுடைய கட்சியினரை அரசியல் பண்ண சொல்வது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.
ஈசிஆர் சரவணனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த்தும் சோஷியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ளார்.

களத்தில் இறங்கி விஜய் மக்கள் இயக்கம் பணி செய்வது நல்ல விஷயம் தான். ஆனால், இப்படி குப்பையை அள்ளி குப்பை மேலயே போடுவது எல்லாம் என்ன லாஜிக் என விஜய் ரசிகர்களே கடுப்பாகி வரும் அளவுக்கு இப்படி ஒரு செயலை செய்யலாமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
களத்தில் விஜய் மக்கள் இயக்கம்: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள் என உத்தரவிட்டு அவர் அமைதியாகி விட்டார். நடிகர் விஜய்யின் குட் புக்கில் இணைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆளுக்கொரு வேலையை பார்த்து வருகின்றனர். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டாற்றி பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். சிலர், அரசியல் லாபத்திற்காக சீன் போட்டு சிக்கி வருவதை தான் ரசிகர்களும் நெட்டிசன்களும் கிண்டலடித்து வருகின்றனர்.
போட்டோ தூக்கி: ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்துக்கு உணவு வழங்கிய வீடியோவில் ஒரு நிர்வாகி நடிகர் விஜய்யின் ஃபிரேம் போட்ட பெரிய போட்டோவை தூக்கிக் கொண்டு சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சர்கார் ஸ்டைலில் விஜய் புதிய அரசியல் செய்வார் என பார்த்தால், இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் என சொல்வது போன்ற பழைய பாணி அரசியலையே அவரது மக்கள் இயக்கத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த் தான் ஹைலைட்: போட்டோ தூக்கினது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்கிற அளவுக்கு புஸ்ஸி ஆனந்த் பண்ண வேலை தான் தற்போது சமூக வலைதளங்களில் செம ட்ரோல் மெட்டீரியலாகி உள்ளது. குப்பை இருக்கும் இடத்திலேயே கீழிருந்து குப்பையை அள்ளி மேலே அவர் போடுவது போன்ற வீடியோவை ஷேர் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர். களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











