Vijay's Gold: 3132 கிராம் தங்கம்.. மனைவியிடம் எத்தனை கோடிக்கு வைரம் இருக்கு தெரியுமா?.. அப்போ அது?
சென்னை: நடிகர் விஜய் தன்னிடம் 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளதாக இன்று தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவித்த நிலையில், அவரது வேட்பு மனுவில் உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கம் போல பிரபலங்கள் பல சொகுசு கார்கள், பல கோடிக்கு சொத்து மதிப்பு இருந்தாலும், தங்களிடம் எதுவுமே இல்லை என்பது போல வேட்பு மனு தாக்கல் செய்வார்கள்.
ஆனால், விஜய் அப்படி செய்யாமல் சுமார் 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பது பற்றியும் தங்கம், வைரம் மற்றும் சொகுசு கார்கள் குறித்த தகவல்களையும் வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மற்றும் சங்கீதா இடையே விவாகரத்து சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தனது மனைவியிடம் இருக்கும் தங்கம் மற்றும் வைர நகைகள் குறித்த தகவல்களையும் விஜய் தெரிவித்து இருப்பது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யிடம் உள்ள தங்க நகைகள்: இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்க நகை 13 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் 883 கிராம் அதாவது 1.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மனைவி சங்கீதா வசம் 3,132 கிராம் தங்க நகைகள் அதாவது 4.07 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பதாகவும் 1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைர நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி பெயரில் சொத்துக்கள்: நடிகரும் தவெக தலைவருமான விஜய் பல வருடங்களாக சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வருகிறார். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே விவாகரத்து சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், அவர் தனது மனைவி பெயரில் உள்ள தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.
நீலாங்கரை வீடு: விஜய் தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை என அவரது மனைவி சங்கீதா விஜய் புலம்பிய நிலையில், அவர் பெயரில் இத்தனை கோடி சொத்து இருக்கா? என்றும் ஜீவனாம்சம் வேறு அதிகளவில் கேட்டுள்ளாரே என விஜய் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இத்தனை ஆடம்பர வாழ்க்கையை விடுத்து குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை தாண்டி, அரசியல் நெருக்கடிகளை சமாளித்து விஜய் தொடர்ந்து அரசியலில் போராடுகிறாரே என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











