twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவனேன்னு அவர் சினிமாவில் இருக்கார் அவரை சீண்டி அரசியல் பக்கம் திருப்ப வேணாம்.. விஜய் ரசிகர்கள்!

    |

    Recommended Video

    Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

    சென்னை: நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

    #Vijay, #ITRaid என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ஹேட்டர்ஸ் டிரெண்ட் செய்து வருகின்றனர். தளபதி ரசிகர்களும் அந்த ஹாஷ்டேக்கில் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வசனத்தை போட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இயக்குநர் அட்லீ குறித்த மீம்களும், அர்ச்சனா கல்பாத்தி குறித்த ட்ரோல்களும் எல்லை மீறி செல்கின்றன.

    அட்லீ தலைமறைவு

    பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், அப்படத்தின் இயக்குநரான அட்லீ தலைமறைவாகி விட்டார் என விஜய் ஹேட்டர்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #ITRaid ஹாஷ்டேக்கில் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

    இதுதான் காரணம்

    ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீதும், தளபதி விஜய்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், 17 நாட்களில் 300 கோடி வசூல் என சொன்னது தான் ஐடி ரெய்டுக்கு காரணம் என ட்விட்டரில் சண்டையிட்டு வருகின்றனர்.

    ரெய்ட் அப்டேட்

    இந்த குசும்புக்கார நெட்டிசன் அர்ச்சுமா ரெய்டு அப்டேட் எங்கேம்மா என ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். பிகில் படத்தின் அப்டேட்களை வழங்கி வந்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் கடந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என ட்வீட் போட்டது தான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    சிவனேன்னு இருப்பவரை சீண்ட வேணாம்

    வரலாறு மறுபடியும் சொல்லும் விஜய் மிஸ்டர் க்ளீன் என்று, சில அரசியல் உள்நோக்கங்களுக்காகத் தான் விஜய் விசாரிக்கப்பட்டு வருகிறார். சிவனேன்னு அவர் சினிமாவில் இருக்கார் அவரை சீண்டி அரசியல் பக்கம் திருப்ப வேணாம்! என செம்ம கடுப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ஒண்ணும் புடுங்க முடியாது

    ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீதும், தளபதி விஜய்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் ஐடி ரெய்டு என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், தளபதி ரசிகர்கள், ஒண்ணும் புடுங்க முடியாது என்ற தெறி படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு பதில் அளித்து வருகின்றனர்.

    ஃப்ரீ புரொமோஷன்

    மெர்சல் படத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு கிளப்பி, படத்தை மிகப்பெரிய ஹிட்டாக்க ஃப்ரீ புரொமோஷன் செய்தனர் என்றும், தற்போது மாஸ்டர் படத்திற்கான ஃப்ரீ புரொமோஷன் வேலைகள் தான் நடக்கிறது என்றும், தளபதி ரசிகர்கள் கூலாக ட்வீட் போட்டு வருகின்றனர். தளபதி விஜய், இந்த ரெய்டு பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பார் என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Sources informed that cross-verification was done regarding Vijay's remuneration for his recent movie 'Bigil' which was informed by Anbu and AGS.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X