ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி படங்களின் சூட்டிங்... சந்திப்பு நடைபெறுமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை : தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

'Vijay Uncle கூட நடிக்கணும்' குட்டி பையன் Rithu Interview | Tamil Filmibeat

இதனிடையே இன்று முதல் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது.

ஒரே ஸ்டூடியோவில் இருவரது படப்பிடிப்பும் நடைபெறும் நிலையில் இருவரும் சந்தித்து பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் டைரக்ஷனில் சென்னையின் கோகுலம் ஸ்டூடியோவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாடல் உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சர்தார் படம்

சர்தார் படம்

இதனிடையே, நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் சூட்டிங்கும் இன்று முதல் கோகுலம் ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது. இன்றைய தினம் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இதற்கான ரிகர்சல் கடந்த சில தினங்களாக நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

கார்த்தி இரண்டு வேடங்கள்

கார்த்தி இரண்டு வேடங்கள்

மித்ரன் இயக்கத்தில் படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். கார்த்தி தந்தை மற்றும் மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் இன்றைய தினம் மீண்டும் துவங்கியுள்ளது.

சந்திக்க வாய்ப்பு

சந்திக்க வாய்ப்பு

இந்நிலையில் விஜய் மற்றும் கார்த்தி இருவரும் ஒரே ஸ்டூடியோவில் தங்களது சூட்டிங்கை மேற்கொள்ளவுள்ளதால் இருவரும் சந்தித்து பேசுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு அவர்கள் சந்தித்துப் பேசுவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சந்திப்பு நிகழ்வது முக்கியமானதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X