2026ல் விஜய் முதல்வராவார் ஏன் தெரியுமா? கீர்த்தி சுரேஷின் ராசி அப்படி.. டிரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு விஜய் தனது நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று சொன்னாலும் அவரின் ரசிகர்கள் அவரின் டிபிக்களை இணையத்தில் ஷேர் செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ள விஜய், இந்த உச்சத்தை அவ்வளவு எளிதில் எட்டிவிடவில்லை. தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் தனது ஆசையை கூறி சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜய், வெற்றி என்ற படத்தில் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பின்பு நாளை தீர்ப்பு படத்தில் ஹீரோவான அறிமுகமான விஜய். இன்று, தமிழகத்தின் நாளை தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

தளபதி தளபதி: விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழ வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த உடன், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்த நம் அரசியல் பயணம் தொடங்கும் என அறிவித்திருந்தார்.
முழுநேர அரசியல்: சரியான நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள விஜய், கைவசம் உள்ள படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இவரின் இந்த முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், தமிழகத்தின் இளைஞர்கள் அரசியலில் இவரின் செயல்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று 50வயதை எட்டி உள்ள விஜய்க்கு ரசிகர்கள் இணையத்தின் வழியாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரெண்டாகும் மீம்ஸ்: இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஒரு மீம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த மீம் என்னவென்றால், கீர்த்தி சுரேசுடன் யார் சேர்ந்து நடித்தாலும் அவருக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் அமைந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் பவன்கல்யாண் மற்றும் விஜய்யின் போட்டோவை போட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்தார் அதன் பின் உதயநிதி அரசியலில் நுழைந்து விளையாட்டுத்துறை அமைச்சராகி விட்டார்.

கீர்த்தி சுரேஷின் ராசி அப்படி: அதே போல கீர்த்தி சுரேஷூடன் நடித்த பவன்கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வராகிவிட்டார். அதே போல கீர்த்தி சுரேஷூடன் சேர்ந்து இரண்டு படத்தில் நடித்துள்ள விஜய், 2026 தேர்தலில் நிச்சயம் முதல்வராகிவிடுவார். ஏன்னா நம்ம கீர்த்தி சுரேஷின் ராசி அப்படி என்று மீம்ஸ் போட்டுள்ளனர். இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னென்ன கம்பிகட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க பாருங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











