“தளபதி 67“ அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
சென்னை : தளபதி 67 படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானத் திரைப்படம் வாரிசு.
குடும்ப செண்டிமென்ட் கொண்ட இப்படத்தில் விஜய்,ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,குஷ்பு,எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

தளபதி 67
வாரிசு படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அப்டேட்
இப்படத்தில் விஜய்யின் தோற்றம் எப்படி இருக்கும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதால், லோகேஷ் கனகராஜ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரிடம் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் அப்டேட் கேட்டதால், லோகேஷ் சமூகவலைத்தளத்தில் இருந்தே தற்காலிகமாக விலகி உள்ளார்.

தளபதி 67 அப்டேட்
இந்நிலையில், தளபதி 67 படத்தை தயாரித்து வரும் செவன் க்ரீன் ஸ்டூடியோ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும், ரத்ன குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் மற்றும் தீராஜ் வைடி ஆகியோர் வசன கர்த்தா என்றும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். மேலும் தளபதி 67 திரைப்படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமாந்த ரசிகர்கள்
தளபதி 67 திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தளபதி ரசிகர்கள் வாய் பிளந்து காத்திருந்த நிலையில், வெறும் தளபதி 67 என்று வந்த அறிவிப்பால் டல்லாகி போனார்கள். குறைந்தபட்சம், விஜய்யின் லுக் அல்லது கதாபாத்திர பெயர் அல்லது தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் பற்றி சொல்லி இருக்கலாம் என புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











