டோலிவுட்டுக்கு ராஜமெளலின்னா.. கோலிவுட்டுக்கு தளபதி விஜய் தான்.. என்னங்க சொல்றீங்க?

சென்னை: இயக்குநர் ராஜமெளலி தெலுங்கு நடிகர்களை பான் இந்தியா ஹீரோக்களாக மாற்றிக் காட்டுகிறேன் என தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வரிசையில் அடுத்து மகேஷ் பாபுவும் பான் இந்திய ஹீரோவாக மாறவுள்ளார்.

டோலிவுட்டில் லாஜிக் இல்லா மேஜிக் படங்களையே இயக்குநர்கள் எடுத்து வந்து ஓவர் மசாலாவை திரையில் காட்டி வந்த நிலையில், குவாலிட்டியாக உலகமே பார்த்து வியக்கக் கூடிய படங்களை நம்ம நடிகர்களை வைத்தே கொடுக்க முடியும் என ராஜமெளலி பண்ண மேஜிக் தற்போது பாலிவுட்டை விட மிகப்பெரிய திரையுலகமாக டோலிவுட் மாற காரணமாகி உள்ளது.

Vijay SS Rajamouli Nelson Atlee

அப்படியே நம்ம கோலிவுட்டை பார்த்தால் ஷங்கர் அந்த வேலையை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உடனே அதிகம் டிராவல் செய்த நிலையில், அடுத்த ஜெனரேசன் நடிகர்களை பெரிய ஹீரோக்களாக மாற்ற தவறிவிட்டார்.

ராஜமெளலி பாய்ஸ்: டோலிவுட்டில் இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் பல முன்னணி நடிகர்கள் ராஜமெளலி பாய்ஸாகவே உள்ளனர். நான் ஈ படத்தில் நானியையும் சமந்தாவையும் நடிக்க வைத்தார். அந்த படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப்பும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தான். அதன் பின்னர் மகதீரா படத்தில் ராம்சரணை இயக்கினார். பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு மிகப்பெரிய அளவில் பான் இந்திய ஹீரோ அந்தஸ்த்தை பெற்றுத் தந்தார்.

Vijay SS Rajamouli Nelson Atlee

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வரை வென்று உலகளவில் ராஜமெளலியின் பாய்ஸான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் பல ஹாலிவுட் இயக்குநர்களையே வியக்க வைத்துள்ளனர். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு அடுத்து ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையில், அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் உலகளவில் பாகுபலி 2 படத்தின் ரெக்கார்டையே முறியடிக்கும் என தெரிகிறது.

Vijay SS Rajamouli Nelson Atlee

தளபதி பாய்ஸ்: ஆனால், தமிழில் எந்தவொரு இயக்குநரும் இந்தளவுக்கு ஹீரோக்களை பான் இந்தியா ஹீரோக்களாக உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக ஹீரோக்கள் தான் புதிது புதிதாக திறமையான இயக்குநர்களை கண்டுபிடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் தளபதி விஜய்யின் பாய்ஸ் தான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை கலக்கி வருகின்றனர்.

அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன்: நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கிய அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்கள் இந்தியளவில் பிரபலமாகி வருகின்றனர். ஷாருக்கானுக்கு 1100 கோடி வசூல் படத்தை அட்லீ ஜவான் படத்தின் மூலம் கடந்த ஆண்டு கொடுத்தார். அடுத்து சல்மான் கான், கமல்ஹாசனை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay SS Rajamouli Nelson Atlee

ரஜினிக்கு சூப்பர் ஹிட்: தர்பார், அண்ணாத்த என தோல்விகளை சந்தித்து வந்த ரஜினிகாந்துக்கு விஜய்யை வைத்து படம் இயக்கிய நெல்சன் ஜெயிலர் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். அடுத்து லோகேஷ் கனகராஜ் கூலி எனும் செம அட்டகாசமான படத்தை கொடுக்க காத்திருக்கிறார். அந்த படத்திலும் பான் இந்தியா நடிகர்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X