Vijay :சஞ்சீவிடம் கோபப்பட்ட விஜய்.. பேசாமல் இருந்ததற்கு காரணம் தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். ஆனால் மிகவும் அமைதியான சுபாவத்தை கொண்ட அவருக்கு நண்பர்கள் குறைவுதான்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் 68 படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சிஎஸ்கே என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay and Sanjeev clash and the reason behind the incident revealed now

சஞ்சீவிடம் கோபப்பட்டு 6 மாதங்கள் பேசாமல் இருந்த விஜய் : நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது சமீபத்திய படங்கள் பீஸ்ட், வாரிசு போன்றவை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர், அடுத்தடுத்த சூட்டிங் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இதையொட்டி படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நீண்ட ரிகர்சலுக்கு பிறகு படத்தின் சாங் சூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் அடுத்ததாக மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய இயக்குநர் லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படத்தையும் உறுதி செய்துள்ளார் விஜய். தன்னுடைய தளபதி 68 படத்தை தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதற்கான கதை டிஸ்கஷன் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு கிரீத்தி ஷெட்டி அல்லது பிரியா பவானி சங்கர் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங் குறித்து லியோ படத்தின் ரிலீசுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே மிகவும் ரிசர்வ் டைப்பான விஜய், கேமரா முன்பு வந்துவிட்டால் சுறுசுறுப்பாகி விடுவார். கேமராவை தாண்டி அவருக்கு கலகலப்பாக பேச்சை மேடைகளிலும் பார்க்க முடியும். தன்னுடைய சுபாவத்திற்கு ஏற்றபடி அவருக்கு மிகவும் குறைவான நண்பர்களே காணப்படுகின்றனர். தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் தற்போதுவரை நட்பு பாராட்டி வருகிறார் விஜய். இவர்களில் சிலர் விஜய்யுடன் இணைந்து நடித்தும் உள்ளனர்.

இந்த நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் சீரியல் மற்றும் சினிமா நடிகர் சஞ்சீவ். இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருந்த போதிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் தொடர்ந்து ஆறு மாதங்கள் பேசாமல் இருந்ததாக தகவல்கள் கூறப்பட்டன. அதற்கு காரணம் சஞ்சீவ் அப்போது பிசியாக நடித்துவந்த திருமதி செல்வம் சீரியல்தான் என்று கூறப்படுகிறது. பிரபல சேனலில் விஜய் நண்பர்கள் குறித்த ஷோ ஒன்று நடத்தப்பட, சஞ்சீவ், இந்த சீரியலில் பிசியாக இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் விஜய் கடுப்பானதாகவும் அவரிடம் தொடர்ந்து ஆறு மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர்கள் இருவரும் 6 மாதங்கள் கழித்து சமாதானமடைந்துள்ளனர். விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தொடர்ந்து நடித்துவந்த சஞ்சீவ், அதன்பின்பே சின்னத்திரையில் கவனம் செலுத்தத் துவங்கினார். அவருக்கு திருமதி செல்வம் சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X