அவங்க செம க்ளோஸ்.. விஜய் - விஜய் சேதுபதியின் அசர வைக்கும் நட்பு.. விரைவில் செம நியூஸ் இருக்கு!
நடிகர் விஜயை வைத்து நடிகர் விஜய் சேதுபதி விரைவில் படம் தயாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: நடிகர் விஜயை வைத்து நடிகர் விஜய் சேதுபதி விரைவில் படம் தயாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Recommended Video
மல்டி ஸ்டார் படமாக நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து வருகிறார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மூன்று வாரம் முன் வெளியானது.

என்ன முத்தம்
இந்த நிலையில் மாஸ்டர் பட படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகி இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார் என்று செய்திகள் வெளியானது. ஆம், பட பிடிப்பு தளத்தில் விஜய் முத்தம் கேட்டதற்கு விஜய் சேதுபதி அவரின் கன்னத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

வேறு என்ன ஆதரவு
அதேபோல் நடிகர் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும், மத மாற்ற வதந்திகள் குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்தார். இதில் விஜய்க்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்தார்.‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி இப்படி அதிரடியாக பேசியது பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிவிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி - விஜய் இருவரும் நெருக்கம் ஆனார்கள்.

செம க்ளோஸ் நண்பர்கள்
இந்த நிலையில் இவர்களை போல நெருக்கமான நண்பர்களை பார்க்க முடியாது படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள். பல நாள் நண்பர்கள் போல நெருக்கமாக பழகிக் கொள்கிறார்கள் என்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்போதும் இருவரும் பல்வேறு சினிமாக்கள் குறித்து ஆர்வமாக பேசி வருகிறார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

விரைவில்
இவர்களின் நட்பு ஒருவரை வைத்து இன்னொருவர் படம் தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி சிறிய சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்து இருக்கிறார். அசோக் செல்வன் போன்ற சிறிய ஹீரோக்களை வைத்து இவர் படம் எடுத்து வருகிறார். ஆனால் இவரின் தயாரிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகவில்லை. இதனால் அவர் சில இழப்புகளை சந்தித்தார்.

செம
இந்த நிலையில் விரைவில் விஜய் சேதுபதி விஜய் படம் ஒன்றை தயாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மீடியம் பட்ஜெட்டில் படம் ஒன்று வெளியாக வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதிக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி பெரும்பாலும் இயக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











