அவதார் ஸ்டைலில் ஷங்கரின் மெகா ப்ராஜக்ட்... விஜய் - ஷாருக்கான் கூட்டணி... 900 கோடி பட்ஜெட்..?

சென்னை: ஷங்கர் தற்போது ஒரே நேரத்தில் ஆர்சி 15, இந்தியன் 2 திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ஆர்சி 15, இந்தியன் 2 திரைப்படங்கள் இந்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவை ஹீரோவாக வைத்து வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மேக்கிங் ஸ்டைலில் ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 ஒரே நேரத்தில் ஆர்சி 15 - இந்தியன் 2

ஒரே நேரத்தில் ஆர்சி 15 - இந்தியன் 2

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.O என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருகிறார். இயக்குநராக மட்டும் இல்லாமல் எஸ் பிக்சர்ஸ் பேனரில் பல படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது ஆர்சி 15, இந்தியன் 2 படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ஆர்சி 15 படமும், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஷங்கரின் அடுத்தடுத்த மெகா பிளான்

ஷங்கரின் அடுத்தடுத்த மெகா பிளான்

இந்த இரண்டு படங்களும் வெளியானதும் ஷங்கர் அடுத்து யாரை இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்

 விஜய் - ஷாருக்கானுடன் கூட்டணி?

விஜய் - ஷாருக்கானுடன் கூட்டணி?

இதனிடையே விஜய் - ஷாருக்கான் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் தான் உதவியாளராக வேலை பார்த்தார் ஷங்கர். ஆனால் விஜய்யும் ஷங்கரும் நண்பன் படத்தில் மட்டுமே இணைந்தனர். அந்தப் படமும் இந்தியில் ஹிட் அடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக தான் உருவானது. இதனால் மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணிக்கு ஷங்கர் முடிவெடுத்துள்ளாராம். இதில் ஷாருக்கானும் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 அவதார் மேக்கிங் ஸ்டைலில்

அவதார் மேக்கிங் ஸ்டைலில்

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஷாருக்கான் அட்லீ டைரக்ஷனில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விஜய் - ஷாருக்கான் இருவருமே நண்பர்களாக பழகி வருகின்றனர். ஷங்கர் இயக்க நினைத்துள்ள படமும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால், அதில் விஜய் - ஷாருக்கானை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். சயின்ஸ் பிக்சன் ஜானரில் 900 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இரண்டாம் பாகம் தண்ணீருக்கு அடியில் படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் பிரம்மாண்டமாக இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப்படும் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X