விஜய், சிம்புவையே பெண்டு நிமிர்த்தியவர் பிக் பாஸ் வீட்டுக்கு வரப் போறாரா? வேற லெவல்ல இருக்குமே!

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குநர் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு அப்படியே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்த நடன இயக்குநர்களையும் நல்லா டான்ஸ் ஆடத் தெரிந்தவர்களையும் போட்டியாளர்களாக இறக்க பிக் பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

நடிகர்கள் விஜய், சிம்புவையே முட்டி மூவ்மென்ட் போட வைத்து பெண்டு நிமிர்த்திய அந்த பிரபல நடன இயக்குநர் தான் போட்டியாளராக வரப் போகிறார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் சீசன் 6 வருது

பிக் பாஸ் சீசன் 6 வருது

அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் கமல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக் பாஸ் வீட்டில் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பத்திரிகையாளர்களுக்கு முன்னதாக காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதாள சிறை இல்லை

பாதாள சிறை இல்லை

போன முறை நீச்சல் குளத்தை வீணடிக்க வேண்டாம் என பாதாள சிறை அமைத்திருந்தனர். ஆனால், மழை பெய்தால் அங்கே தண்ணீர் நிரம்பி விடும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இந்த முறை ஜெயில் செட்டப்பை வேறுமாதிரி மாற்ற பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவி புராடெக்ட்ஸ்

விஜய் டிவி புராடெக்ட்ஸ்

வழக்கமாக இந்த முறையும் டிடி நீலகண்டன், தர்ஷா குப்தா, மதுரை முத்து என ஏகப்பட்ட விஜய் டிவி புராடெக்ட்ஸ்களின் பெயர்கள் தான் அடிபட்டு வருகின்றன. குக் வித் கோமாளி பிரபலங்களான ரக்‌ஷன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். விரைவில் மொத்த பட்டியலும் லீக் ஆகி விடும் என்பது கன்ஃபார்ம்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக விஜய், சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் தரமான டான்ஸ் ஆடும் நடிகர்களையே பெண்டு நிமிர்த்திய நம்ம ராபர்ட் மாஸ்டர் போட்டியாளராக பங்கேற்க போவதாக ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. பிக் பாஸ் டைட்டில் வாங்க வில்லை என்றால் கூட அடுத்து நடக்கும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 3ஐ இவர் அலேக்காக தட்டித் தூக்கிவிடுவார் என்பது கன்ஃபார்ம்.

அமீரை தொடர்ந்து

அமீரை தொடர்ந்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகர்களாக கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது நடன இயக்குநர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். மற்றவர்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பது மட்டுமின்றி பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நல்ல டான்ஸை ரசிகர்களுக்கு காட்டுவதற்காகத்தான் இந்த பிளான் என்கின்றனர்.

முட்டி மூவ்மெண்ட்

முட்டி மூவ்மெண்ட்

நலந்தானா பாடலில் சிம்பு போடும் முட்டி மூவ்மெண்ட், சுறா படத்தில் விஜய் போடும் ஃப்ளோரிங் ஸ்டெப், வரலாறு படத்தில் அஜித்துக்கு டான்ஸ் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார் ராபர்ட் மாஸ்டர். இவர் உள்ளே போனால் ஆட்டத்துக்கு பஞ்சமே இருக்காது என்றும் சக போட்டியாளர்கள் பெண்டு நிமிர்ந்திடும் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X