Vijay Simbu: மாமன்னன் வடிவேலு லுக்கில் விஜய்... மாஸ் காட்டும் சிம்பு... கலங்கடிக்கும் போஸ்டர்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உட்பட சில போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மாமன்னன் வடிவேலு லுக்கில் விஜய் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

மாமன்னன் வடிவேலு லுக்கில் விஜய்: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன். முதன்முறையாக வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், ஏஆர் ரஹ்மான் ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ளார் மாரி செல்வராஜ். இதனால், மாமன்னன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இதில், வடிவேலுவும் உதயநிதியும் கையில் துப்பாக்கி, அரிவாளுடன் இருக்கும் போஸ்டர் ரசிகர்களையே மிரள வைத்தது. எப்போதும் காமெடியில் கலக்கும் வடிவேலு ரொம்பவே சீரியஸ்ஸான டெரர் லுக்கில் மிரட்டியுள்ளார்.
அதேபோல், உதயநிதியின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருந்தது. வடிவேலு தான் மாமன்னன் என்ற லீடிங் ரோலில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாமன்னன் வடிவேலு லுக்கில் விஜய்யும், உதயநிதியை போல சிம்புவும் இருக்கும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், விஜய் கையில் துப்பாக்கியும், சிம்பு கையில் நீளமான வாளும் இருப்பதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மாமன்னன் லுக்கில் விஜய், சிம்புவின் இந்த போஸ்டரை ரசிகர்கள் கிரியேட் செய்துள்ளனர். ஃபேன்மேட் போஸ்டராக டிவிட்டரில் வெளியான இந்த போஸ்டர் வெறித்தனமாக வைரலாகி வருகிறது. வடிவேலுவின் மாமன்னன் கேரக்டரில் விஜய்யும் உதயநிதி ரோலில் சிம்பும் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மாமன்னன் படக்குழுவினருக்கே இந்த பேன்மேட் போஸ்டர் சர்ப்ரைஸ்ஸாக தான் இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய்யும் சிம்புவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, கர்ணன் படத்தின் சீக்வெல்லாக மாமன்னன் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல், மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











