அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட்.. ஈகோ இல்லாத விஜய், சூர்யா.. கிண்டலடித்த இயக்குநர்களுக்கே வாய்ப்பு!
சென்னை: சதுரங்க வேட்டை படத்தில் பாம்புக்கு விஜய் பெயர் வைத்து பயங்கரமாக ட்ரோல் செய்த எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் தயக்கமின்றி தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அதே போல அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட் என கலாய்த்த ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்கப் போகும் அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களிடம் போட்டி மனப்பான்மை நிலவுகிறது என்றும் ஒருவரை மட்டம் தட்ட இன்னொருவர் பாடல்கள் மூலம் மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு ரசிகர்கள் சண்டையை ஆரம்பத்தில் இருந்தே அதிகரித்து வசூல் வேட்டை நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

ஆனால், நடிகர்கள் எப்போதுமே தங்களுக்குள் தொழில் போட்டியிருந்தாலும் நண்பர்களாகவே தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே பாணியைத் தான் இயக்குநர்கள் பக்கமும் தொடர்கின்றனர் என்பது சமீபத்திய அறிவிப்புகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட்: நானும் ரவுடிதான் படத்தில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட் இருக்கு வேணுமா என கேட்டு சூர்யா படத்தை கலாய்த்திருப்பார். அதற்காக சூர்யா ரசிகர்கள் அவரை சோஷியல் மீடியாவில் அடி வெளுத்தனர். அதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் காமெடியனாக நடிக்க ஆர்ஜே பாலாஜியை சூர்யா அப்போதே அனுமதித்திருப்பார்.
சூர்யா 45 இயக்குநர்: எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள சூர்யா 45 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் சூர்யா வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படத்தில் ஒப்பந்தம் ஆன நிலையில், அந்த படம் மட்டுமே இன்னமும் ஆரம்பமாகவில்லை. அதற்கு முன்னதாக அரை டஜன் படங்களில் நடித்து விடுவார் என்றே தெரிகிறது. கங்குவா, சூர்யா 44 படங்களை முடித்த சூர்யா அடுத்து சூர்யா 45 படத்தில் நடிக்கப் போகிறார். விஜய்க்காக அவசர அவசரமாக ஆர்ஜே பாலாஜி ரெடி பண்ண கதையில் தான் சூர்யா நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தளபதி விஜய் தாக்கப்பட்டாரா?: எச். வினோத் இயக்குநராக அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தில் மண்ணுளி பாம்பை மண்ணுளி பாம்பு என்று பெயர் சொன்னால் அதன் எடை குறைந்து விடும் என மோசடி செய்ய அதற்கு விஜய் என பெயர் வைத்து அட்ராசிட்டி செய்திருப்பார் எச். வினோத். அவர் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் ஈகோ இல்லாமல் இப்படி தங்களை கலாய்த்தவர்களையே இயக்குநர்களாக மாற்றி அழகு பார்க்க காரணம் ப்யூர் பிசினஸ் மைண்ட் மட்டுமே என்கின்றனர். இந்த ப்ராஜெக்ட் க்ளிக் ஆகும் என நினைத்தால் நடிகர்கள் ஓகே சொல்லி விடுகின்றனர். மற்றபடி ஈகோ பார்க்க எல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.
வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு: மங்காத்தா முடிந்த பிறகே விஜய் படத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டியது என்றும் பார்ட்டி ஒன்றில் நடந்த ஒரு விஷயத்தால் மனக்கசப்பு ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து தான் வெங்கட் பிரபுவுக்கு விஜய் ஓகே சொல்லி கோட் படத்தில் நடித்தார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











