Vijay Suriya: மாணவர்களுக்கு உதவி... விஜய்க்கு டஃப் கொடுக்கும் சூர்யா... கோலிவுட்டில் கல்வி அரசியல்!

சென்னை: அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோருடன் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

சிவகுமார், சூர்யா, கார்த்தி இவர்கள் மூவரும் ஒரே குடும்பமாக சேர்ந்து இந்த அகரம் பவுண்டேசன் அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யும் சூர்யாவும் மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

 Vijay and Suriya: Netizens criticized Vijay and Suriya as competing in helping students

விஜய்க்கு டஃப் கொடுக்கும் சூர்யா:சில தினங்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கினார். அதாவது 234 தொகுதிகளிலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் அரசியல் குறித்தும் விஜய் பேசியிருந்தார். இதனால் அரசியல் ஆதாயத்துக்காக தான் விஜய் மாணவர்களுக்கு உதவியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரம் மாணவர்களுக்கு விஜய் உதவியதற்கும் அவர் அரசியலுக்கு வருவதற்கும் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், கோலிவுட் மட்டுமின்றி ஜார்ஜ் கோட்டையும் பரபரப்பானது.

இந்த நிலையில் தான் நேற்றைய தினம் அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 விழா நடைபெற்றது. சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பல வருடங்களாக மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற மாணவர்களுக்காக இந்த உதவி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய போது, சூர்யாவை முன்வைத்தே பல விமர்சனங்கள் எழுந்தன. அதாவது உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி வழங்குவது தான் அறம் என கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்றைய விழாவில் எல்லோருக்கும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும் எனக் கூறியிருந்தார்.

அதேபோல், சாதி மதங்களைக் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்க்கை மூலம் கல்வியைப் பாருங்கள். கல்வி தான் எப்போதும் முக்கியம் என பேசியிருந்தார். அதேபோல், விஜய் பயிலரங்கம் தொடங்கியது ரொம்பவே மகிழ்ச்சியானது தான். இதுவும் போதாது, கல்வி உதவி இன்னும் தேவைப்படுகிறது எனக் கூறியிருந்தார்.

 Vijay and Suriya: Netizens criticized Vijay and Suriya as competing in helping students

அரசியல் ஆதாயத்துக்காக விஜய்யும் மாணவர்கள் நலனுக்காக சூர்யாவும் உதவி செய்து வருகின்றனர். ஆனால், இந்த இரண்டுமே நல்லவிதமாக மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அது இல்லாமல் விளம்பர நோக்கமாக இருக்கக் கூடாது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதேபோல், கல்வி மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்படி, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும் எனவும் அட்வைஸ் செய்துள்ளனர்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா சிகரெட் புகைத்தபடி போதைப் பொருட்கள் கடத்தும் கேங்ஸ்டராக நடித்திருந்தார். அதேபோல், லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய் சிகரெட்டுடன் நடனமாடி சர்ச்சையில் சிக்கினார். மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள இருவரும், அவர்களின் ஆரோக்கியம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X