»   »  விஜய் - சூர்யா ரசிகர்கள் ரகளை!

விஜய் - சூர்யா ரசிகர்கள் ரகளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
விஜய் ரசிகர்கள் செய்த ரகளையால் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சூர்யா ரசிகர்கள் கடுமையாக தாக்கியதில் சென்னையில் ஒருவர் படுகாயமடைந்தார்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், சூர்யா நடித்துள்ள வேல் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளன.

இந்த நிலையில் இருவரது ரசிகர்களாலும் சென்னை மற்றும் ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மகாராணி தியேட்டரில் வேல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவுக் காட்சியின்போது எம்.சி. சாலையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் படம் பார்க்க வந்திருந்தார். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கு முன் இருக்கையில் இருந்தவர்களால் படத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. இதனால், அவர்களை சற்று குணியுமாறு கூறியுள்ளார் திருப்பதி.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முன் இருக்கைக்காரர்கள் திருப்பதியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் திருப்பதிக்கு படுகாயம் ஏற்பட்டது. முகத்தில் ரத்தம் கொட்டக் கொட்ட அவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து திருப்பதியைத் தாக்கிய இரு ரசிகர்களை கைது செய்தனர்.

இதேபோல, ஊத்துக்கோட்டையில் உள்ள குமாரி தியேட்டரில் அழகிய தமிழ் மகன் திரையிடப்பட்டுள்ளது. நேற்று பகல் காட்சி திரையிடப்பட்டது. இடைவேளை விட்டுப் பின்னர் மீண்டும் படம் தொடங்கியபோது, மறுபடியும் முதல் பாதி காட்சிகளே வந்தன.

இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து கூச்சலிட ஆரம்பித்தனர். ஆபரேட்டரும் குழப்பமடைந்தார். இந்த நிலையில், ரசிகர்கள் கடும் கோபத்துடன் இருக்கைகளை அடித்து உடைத்தனர். அவற்றை அங்கும் இங்கும் விசிறியடித்தனர்.

ஆபரேட்டர் அறைக்குள்ளும் புகுந்து சூறையாடினர். இந்த ஆவேச தாக்குதலால் ரூ. 2 லட்சம் அளவுக்கு தியேட்டருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்தத் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட படப் பெட்டியில், இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் அடங்கிய படச் சுருளுக்குப் பதில், முதல் பாதி பிலிமையே தவறுதலாக வைத்து அனுப்பி விட்டனர். இதனால்தான் குழப்பமாகி விட்டதாக தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Read more about: fans surya vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil