தெலுங்கு அப்பாயி.. விஜய், த்ரிஷாவை வெறுப்பேற்றிய பார்த்திபன்.. இப்போ வசமா மாட்டிக்கிட்டாரே!

ஹைதராபாத்: பவன் கல்யாண் நடிப்பில் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகவுள்ள உஸ்தாத் பகத்சிங் திரைப்படத்தில் பார்த்திபன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்று பேசிய பார்த்திபன் தனக்கு தெலுங்கு தெரியாது என்றும் ஆனால், தான் தெலுங்கு நாயுடு அப்பாயி என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் இயக்குநர்கள், நடிகர்கள், ஏன் சில நடிகைகள் கூட சாதிய பெயர்கள் வேண்டாம் என மாற்றி வரும் சூழலில் பார்த்திபன் தான் ஒரு தெலுங்கு நாயுடு என பேசியதை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

Vijay and Trisha fans roasts Parthiban after his Caste reveal speech at Pawan Kalyan event
Photo Credit:

குறிப்பாக விஜய் ரசிகர்கள், குந்தவையை வீட்டுக்குள்ளே குந்தவைன்னு சொன்னாரே இவரைத்தான் வீட்டிலேயே முதலில் குந்தவைக்க வேண்டும் என ரோஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பார்த்திபன் ராதாகிருஷ்ணன் vs த்ரிஷா கிருஷ்ணன்: சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா போட்டோ வந்ததுமே அதை பார்த்த பார்த்திபன் தன்னுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சக நடிகை என அவரைப் பற்றி பேசாமல், விஜய்யுடன் திருமண விழாவில் ஜோடி போட்டு பங்கேற்றதை மனதில் வைத்துக் கொண்டு இந்த குந்தவையை வீட்டிலேயே குந்தவைங்கப்பா என ரைமிங்காக பேசினார்.

வெடித்த சண்டை: மைக் கிடைத்ததும் தான் அறிவாளின்னு சிலர் நினைத்துக் கொண்டு அடிமுட்டாள்த்தனமாக பேசுகின்றனர் என பார்த்திபன் பெயரைக் குறிப்பிடாமல் த்ரிஷா அவருக்கு குட்டு வைத்த நிலையில், மூன்றாம் மனுஷி, மூன்றாம் தரம் என த்ரிஷாவை ஓபனாக அடிக்கத் தொடங்கினார் பார்த்திபன். ஆனால், என்னதான் பார்த்திபன் த்ரிஷாவை தாக்கி பேசினாலும் அவர் அழகாக பார்த்திபன் மகளுடன் திருமணம் ஒன்றில் போஸ் கொடுத்து மாஸ் காட்டிவிட்டார்.

தெலுங்கு நாயுடு: தமிழ்நாட்டில் பார்த்திபனுக்கு மிகப்பெரிய மரியாதை ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், அவரது தமிழுக்கும் அவரது புதிய சிந்தனைகளுக்கும் பலரும் ரசிகர்களாகவே உள்ளனர். இந்நிலையில், பவன் கல்யாண் படத்தில் நடித்த நிலையில், டோலிவுட்டில் தானே பேசுகிறோம் என நினைத்துக் கொண்டு தான் ஒரு தெலுங்கு நாயுடு என நிகழ்ச்சியில் சம்மந்தமே இல்லாமல் சாதிய பெயரை பயன்படுத்தி பார்த்திபன் பேசிவிட்டார் என தற்போது பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பார்த்திபன் ட்வீட்: ”என் நினைவு தவறும்வரை.. உன் நினைவும் தவறாது- தமிழ்!” என சர்ச்சைகளுக்கு மத்தியில் பார்த்திபன் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு தான் நன்றி சொன்ன வீடியோவையும் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X