மாஸ்டர் 50 வது நாள் கொண்டாட்டம்...விஜய்–விஜய்சேதுபதியின் மாஸ் வீடியோ வெளியீடு

சென்னை : கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ் சினிமா மற்றும் தியேட்டர் தொழிலுக்கு நம்பிக்கை கொடுத்த படம் மாஸ்டர். தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் தியேட்டரில் வெளியிடப்பட்டு, பல தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்தது மாஸ்டர் படம்.

விஜய் - விஜய் சேதுபதி காம்போவில் உருவான இந்த படம் தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட மாஸ்டர் படம் தியேட்டரில் 50 வது நாள் என்ற சாதனையை எட்டி உள்ளது.

வசூலை குவிக்கும் மாஸ்டர்

வசூலை குவிக்கும் மாஸ்டர்

தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 16 நாட்களிலேயே மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இருந்தும் படத்தின் தியேட்டர் வசூல் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை. இது வரை ரூ.250 கோடிக்கும் அதிகமாக மாஸ்டர் படம் வசூலித்துள்ளது.

சாதனை மேல் சாதனை

சாதனை மேல் சாதனை

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் மாஸ்டர் படம் நல்ல வசூலை பெற்று, பிளாக்பஸ்டர் படமாகி உள்ளது. தியேட்டரில் 50 வது நாள் என்ற சாதனையை படம் எட்டி உள்ள வேளையில், இப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலை யூட்யூப்பில் இதுவரை 70 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ள மற்றொரு சாதனையும் நிகழ்ந்துள்ளது.

Recommended Video

Thalapathy 65 படபிடிப்பு ஆரம்பம் RUSSIA செல்லும் Vijay | Doctor, SK
 நன்றி தெரிவித்த டைரக்டர்

நன்றி தெரிவித்த டைரக்டர்

மாஸ்டர் 50 வது நாள் கொண்டாட்டத்தை அப்படம் திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெற்றி பெற வைத்ததற்காக ஹீரோ மற்றும் வில்லனுக்கு நன்றி தெரிவிப்பதாக இப்படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கருத்து பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு சிறப்பு பரிசு

படத்தை வெற்றி பெற வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி என ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் அன்சீன் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, பரிசளிக்கும் விதமாக, சூட்டிங்கின் போது விஜய் - விஜய் சேதுபதி பங்கேற்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X