ஒரே இடத்தில் விஜய் சேதுபதி - விஜய்.. சென்னை தெருக்களில் நடந்த ஷூட்டிங்.. தளபதி 64 அப்டேட்!
தளபதி 64 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Recommended Video
சென்னை: தளபதி 64 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல் சண்டை காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டு வருகிறது என்ற தகவல்களும் கசிந்துள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் தான் தளபதி 64. தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தை தொடர்ந்து தளபதி 64 படத்தின் மீது இப்பொழுது இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யார் தயாரிப்பு
நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வரும் சேவியர் பிரிட்டோ நிறுவனம்தான் தளபதி 64 படத்தை வெளியிட உள்ளது. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கதாநாயகியாக மாளவிகா மேனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

எப்படி எல்லாம்
தற்போது சென்னையில் தளபதி 64 படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்பொழுது நடைபெற்று வரும் ஷூட்டிங் சென்னையில் உள்ள குன்றத்தூரில் நடைபெற்று வருகிறது. தெருக்களில் சில சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

யார் எல்லாம்
அதே போல் தளபதி விஜய்யும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கும் காட்சிகள் தான் முதலில் படமாக்கப்பட்டு வருகிறது.. ஏனெனில் விஜய் சேதுபதி இனி நடிக்க இருக்கும் படங்களில் கெட்டப் மாற்ற உள்ளார். அதேபோல் அவரது ஷூட்டிங் தேதிகளை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எப்போது
சாந்தனு மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் காட்சிகள் லேட்டாக படமாக்கப்படும். இந்த படத்தை அடுத்து வரும் மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் பெயர் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











