டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் விஜய் அண்ணா... ரகளை செய்யும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விஜய் அண்ணா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்கு என குட்டி ரசிகர் குறைந்தது ஒருவராவது இருப்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்த நாள் மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

இந்தியளவில் ட்ரென்ட்
டிவிட்டரில் நடிகர் விஜயின் வித்தியாசமான போட்டோக்களை பகிர்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காக விஜய் அண்ணா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்தியளவில் ட்ரென்ட்டாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் விஜய்
என்னுடைய ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் விஜய் அண்ணா..
அர்த்தம் புரிந்ததா?
நாங்கள் விஜய் அண்ணாவை நேசிக்கிறோம்.. அவர் நீண்ட ஆண்டுகள் வாழ வேண்டும்.. அவநம்பிக்கை பலவீனம்.. நம்பிக்கை பலம்.. நெகட்டிவ் ட்ரென்ட் vs பாஸிட்டிவ் ட்ரென்ட் சென்டன்ஸ்க்கு அர்த்தம் புரிந்ததா?
விட்டுவிடுங்கள்
விஜய் அண்ணா.. எதிர்மறை எண்ணத்தை விட்டுவிடுங்கள்..
பெருமையடைகிறேன்
எதிர்மறை எண்ணம் செய்யவைப்பதை விட நேர்மறை எண்ணம் அதிகம் செய்ய வைக்கும் - விஜய் அண்ணா ரசிகர்கள்
விஜய் அண்ணா ரசிகர்களாய் இருப்பதில் பெருமையடைகிறேன்.


Click it and Unblock the Notifications











