GOAT Trailer: தளபதி விஜய் போட்ட தாறுமாறு ட்வீட்.. ’கோட்’ டிரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை நடிகர் விஜய் புதிய போஸ்டருடன் தற்போது வெளியிட்டு ரசிகர்களை அமைதியடைய செய்துள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. மங்காத்தா, மாநாடு படங்களை போல விஜய்யை வைத்து தரமான சம்பவத்தை வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

GOAT Independence Day Vijay

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாக்‌ஷி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் கோட் படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கோட் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது.

சுதந்திர தின சூப்பர் பரிசு: சுதந்திர தினத்தை தளபதி விஜய்யின் கோட் படத்தின் டிரெய்லரை பார்த்து கொண்டாடலாம் என வெறியோடு காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நேற்று அந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அர்ச்சனா கல்பாத்தி விடமுடியவில்லை என வருத்தத்துடன் பதிவிட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிருப்தியில் இருந்த தளபதி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி சூப்பரான சுதந்திர தின பரிசை கொடுத்துள்ளார் விஜய்.

கோட் டிரெய்லர் ரிலீஸ் தேதி: 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என மாஸான போஸ்டருடன் தற்போது விஜய் ட்வீட் போட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். கோட் படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடப் போவது உறுதி என விஜய் ரசிகர்கள் #TheGOATTrailer ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரெக்கார்டு தெறிக்கப்போகுது: இதுவரை தென்னிந்திய சினிமா டிரெய்லர்கள் படைக்காத ரெக்கார்டு சாதனையை கோட் டிரெய்லர் நிகழ்த்திக் காட்டும் என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான கங்குவா டிரெய்லர் 3 நாளில் 30 மில்லியன் வியூஸ் கடந்துள்ள நிலையில், அதையெல்லாம் அசால்ட்டாக தாண்டும் எனக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X