»   »  ஜூன் 22-ம் தேதி ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப் போகிறாரா விஜய்?

ஜூன் 22-ம் தேதி ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப் போகிறாரா விஜய்?

Posted By: Settu Sankar
Subscribe to Oneindia Tamil

ஆண்டுதோறும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அன்று விஜய் ரசிகர்கள் திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் சமீப ஆண்டுகளாக விஜய்யின் பிறந்த நாள் விழா அடக்கியே வாசிக்கப்படுகிறது. அவரும் அன்றைய நாளில் ஏதாவது படப்பிடிப்பில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

Vijay To Announce His Political Decision On June 22

ஆனால் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாள் அப்படி இருக்காது என்கிறார்கள். ஜூன் 22 அன்று விஜய் புதிய முடிவை அறிவிக்கப் போகிறார் என்று கூறி மதுரை நகரெங்கும் போஸ்டர்களை அடித்து தெறிக்க விட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

தின விஜய் என்ற பெயரில் ஒரு செய்தித் தாளின் முதல் பக்கம் போல வடிவமைத்த போஸ்டரில், "தன் நீண்ட நாள் மௌனம் கலைக்கிறார் விஜய்... தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம்' என்று தலைப்புச் செய்தி போல அச்சிட்டுள்ளனர்.

அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து விஜய் அன்றைய தினம் அறிவிக்கப் போவதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

விஜய்யின் மதுரை வடக்கு மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் இந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரஜினியும் கமலும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டனர். விஜய் எப்போது அரசியல் பயணம் ஆரம்பிப்பார் என்று சில தினங்களுக்கு முன் எஸ் ஏ சந்திரசேகரனிடம் கேட்டபோது, "இப்போதுள்ள சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்தால் மக்களுக்கே போரடித்துவிடும்," என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Vijay Fans from Madurai have released a poster on his Political entry

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more