TVK Vijay: இரண்டு தொகுதிகளில் களமிறங்கும் தளபதி விஜய்.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிவித்தார். அதில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறித்து ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், திருச்சி கிழக்கு யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.

விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ள இரண்டு தொகுதிகளுமே அதாவது, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலுமே, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட தொகுதிகள். இதில் இதுவரை மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இரண்டு முறை அதிமுகவும், ஒரு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இரண்டு தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மொத்தமாக ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதேப்போல் பாண்டிச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். நாளை முதல் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் பரவலாக இந்த தேர்தலை நான்கு முனைப் போட்டி என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் இந்த தேர்தலை இரண்டு முனைப் போட்டி என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அந்தந்த தொகுதியின் காப்பாளர்கள். என்னால் எப்போதும் எல்லா தொகுதிகளிலும் இருக்க முடியாது, எனது பிரதிநிதிகளாக நான் இவர்களை உங்களுக்காக தேர்வு செய்துள்ளேன். எனவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசினார்.


Click it and Unblock the Notifications











