Pookie: ஒய் திஸ் கொலவெறியை ஓவர்டேக் செய்த விஜய் ஆண்டனி.. என்ன இழவு லவ்வு ‘பூக்கி’ பாடல் ரிலீஸ்!

சென்னை: மார்கன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் அடுத்து ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'பூக்கி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சூப் பாடலாக உருவாகியுள்ளது.

செல்வராகவன் படங்களிலும், தனுஷ் படங்களிலும் அதிகமாக இடம்பெற்று வந்து சூப் பாடல் தற்போது விஜய் ஆண்டனியின் வைபில் அஜய் திஷன் படத்தில் இடம்பெற்றுள்ளது.

Vijay Anotny and Ajay Dishan s Pookie first single Manasu Valikuthu soup song out now
Photo Credit:

பெண்களை திட்டியும் காதலை திட்டியும் சமீப காலமாக பாடல்கள் வராமல் இருந்த நிலையில், இளைஞர்களை டார்கெட் செய்து தற்போது இப்படியொரு பாடல் வெளியாகி இருக்கிறது.

மனசு வலிக்குது: ஆரம்பமே கெட்ட வார்த்தையுடன் பூக்கி பாடல் ஆரம்பித்துள்ளது. விஜய் ஆண்டனி பாடியும் நடித்தும் உள்ளார். விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கணேஷ் சந்திரா இயக்க, புதிய பரிதி எழுதியுள்ளார். அஜய் திஷன், தனுஷா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அட்டகாசமான கேமியோவும் உள்ளது. மனசு வலிக்குது பாடலிலும் அவர் ஆரம்பத்திலேயே வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை வைப் ஆக்குகிறார்.

ஒய் திஸ் கொலவெறிக்கு போட்டியாக: "மனசு வலிக்குது.. என்ன இழவு லவ்வு" என பாடல் முழுவதுமே ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு போட்டியாக ஏகப்பட்ட வரிகள் இடம்பெற்றுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்த பூக்கி படம் வெளியாகிறது. நடிகர்கள் பாண்டியராஜன், சுனில், நடிகை லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஜென் ஸி காதலர்களை டார்கெட் செய்து இந்த 'பூக்கி' செம ஜாலியான படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X