தளபதி டூ தலைவன்... அரசியல் என்ட்ரி குறித்து விஜய் சூசகம்

சென்னை : பீஸ்ட் படத்தையொட்டி நடிகர் விஜய்யின் இன்டர்வியூ நேற்று இரவு சன் டிவியில் ஒளிபரப்பானது. நெல்சன் திலீப்குமார் எடுத்த இந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் இயல்பாக பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிறப்பான விஜய்யை பார்க்க முடிகிறது. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், தீம் பாடல் உள்ளிட்டவை இதை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டி வருகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

முன்னதாக படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை ஆனந்தம் கொள்ள செய்தது. தொடர்ந்து அப்டேட் கேட்டு தயாரிப்பு தரப்பை நச்சரித்த விஜய் ரசிகர்களுக்கு இந்த போஸ்டர்கள், ட்ரெயிலர், பாடல்கள் கொண்டாட்டத்தை தந்தது. தொடர்ந்து இவற்றை யூடியூபில் ட்ரெண்டிங்கில் அவர்கள் வைத்துள்ளனர்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

முன்னதாக வெளியான அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா பாடல்களில் மிகவும் உற்சாகமான விஜய்யை பார்க்க முடிந்தது. இதில் ஜாலிலோ ஜிம்கானா பாடலை விஜய்யே பாடியிருந்தார். அந்தப் பாட்டிலும் அவரது உற்சாகத்தை பார்க்க முடிந்தது. இதனிடையே ட்ரெயிலரும் ரசிகர்களை மிரட்டியது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

படம் வெளியாகவுள்ள தமிழ், தெங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் சிறப்பான பிரமோஷன்களை செய்து வருகிறது சன் பிக்சர்ஸ். சமீபத்தில் தெலுங்கிலும் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் விஜய் பங்கேற்கவில்லை. ஆனால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விஜய் சிறப்பு பேட்டி

விஜய் சிறப்பு பேட்டி

இதனிடையே படத்தின் ஹைலைட்டாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் டிவிக்கு நேற்றிரவு பேட்டியளித்திருந்தார். சன் டிவியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது. நெல்சன் இந்தப் பேட்டியை எடுத்திருந்தார். அப்போது படம் குறித்த பல விஷயங்களை விஜய் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் என்ட்ரி குறித்து விஜய்

அரசியல் என்ட்ரி குறித்து விஜய்

இதையடுத்து அவரது அரசியல் என்ட்ரி குறித்தும் நெல்சன் கேள்வி எழுப்பினார். இளைய தளபதியில் இருந்து தளபதி ஆன விஜய், எப்போது தளபதியில் இருந்து தலைவனாக மாறுவார் என்று அவர் கேட்டார். அப்போது அதற்கு பதிலளித்து பேசிய விஜய், தளபதி விஜய்யாக இருக்கும் தான் தலைவர் விஜய்யாக மாறுவது ரசிகர்களின் கையில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

விஜய் ரசிகர்கள் எப்போதும் அவரது அரசியல் என்ட்ரிக்காக காத்திருக்கின்றனர். தொடர் கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். சமீபத்தில் உள்ளாட்சி உள்ளிட்ட தேர்தல்களில் அவரது ரசிகர்கள் போட்டியிட்டு சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். இந்நிலையில் அவரது அரசியல் என்ட்ரி விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவனாவது குறித்து விஜய்

தலைவனாவது குறித்து விஜய்


இந்நிலையில் ரசிகர்கள் கையில்தான் தான் தலைவனாவது உள்ளது என்று விஜய் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கண்டிப்பாக அரசியல் என்ட்ரி கொடுப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவரை தலைவனாக பார்க்க அவரது ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

 ரத்தான ஆடியோ ரிலீஸ்

ரத்தான ஆடியோ ரிலீஸ்

விஜய் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடக்கும். அந்த நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி சொல்வது, அரசியல் குறித்து பேசுவது என்று களைகட்டும். இந்தப் படத்திற்கு ஆடியோ ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. விஜய்யின் அரசியல் குறித்த பேச்சை தவிர்க்கும் வகையிலேயே இந்த ரிலீஸ் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X