விஜய் ஆண்டனிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்!
சென்னை: இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.
மெட்ரோ பட இயக்குனரின் இயக்கத்தில் கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.
முதல் முறையாக ட்யூஷன் வாத்தியாராக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயனால் வெளியிடப்படுகிறது.

மெட்ரோ பட இயக்குனர்
இசையமைப்பாளராக பல ஹிட்டுகளை கொடுத்த விஜய் ஆண்டனி இப்பொழுது நடிகராகவும் வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்து வர தற்பொழுது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் கோடியில் ஒருவன் படத்தில் நடித்துள்ளார்

ட்யூஷன் வாத்தியாராக
முழுக்க முழுக்க ஆக்சன் கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ட்யூஷன் வாத்தியாராக நடித்துள்ளார் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்

கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் இப்பொழுது அதன் ட்ரைலரை வெளியிடும் பணிகள் படு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதன்படி வரும் ஏப்ரல் 2ம் தேதி வரும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடுகிறார்
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி நடிகர் சிவகார்த்திகேயன் கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலரை ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார். இதற்கிடையில் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், தமிழரசன், பிச்சைக்காரன் 2, காக்கி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











