கோடியில் ஒருவன் படப்பிடிப்பு நிறைவு.. ஏப்ரலில் ரிலீஸ்!

சென்னை : மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வந்த கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துவருகிறார்.

மீசைய முறுக்கு, நரகாசுரன், காட்டேரி,போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஆத்மிகா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கோடியில் ஒருவன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது அதன் படப்பிடிப்பு முடிந்துள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மெட்ரோ இயக்குனர்

மெட்ரோ இயக்குனர்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தொடர் ஹிட்டுகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி இப்பொழுது மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டியூசன் மாஸ்டராக

டியூசன் மாஸ்டராக

பிச்சைக்காரன், கொலைகாரன் என சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வரும் நிலையில் ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கும் இவர் இந்த கோடியில் ஒருவன் திரைப்படத்தில் பக்கா ஆக்ஷன் கதாநாயகனாக பட்டாஸ் கிளப்பியுள்ளார். இதில் டியூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.

மழையிலும் கண்ணகி நகர்

மழையிலும் கண்ணகி நகர்

மீசையமுறுக்கு,காட்டேரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகை ஆத்மிகா இதில் ஹீரோயினாக நடித்து வர விஜய் ஆண்டனியுடன் பல ரொமான்டிக் காட்சிகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கோடியில் ஒருவன் படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு கொரோனா சூழல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொங்கியது விடாது மழையிலும் கண்ணகி நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கியமான பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

ஏப்ரலில் ரிலீஸ்

ஏப்ரலில் ரிலீஸ்

இவ்வாறு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த கோடியில் ஒருவன் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆள்,மெட்ரோ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்பொழுது ஆக்சன் கதையில் இறங்கியிருக்க மற்றுமொரு பிளாக்பஸ்டர் மூவியாக விஜய் ஆண்டனிக்கு இது அமையும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தை வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X