Ratham OTT Release Date: ரத்தம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீசாகுது? எப்போது தெரியுமா?
சென்னை: சி.எஸ்.அமுதன் இயக்கிய ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ரத்தம்.

இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் ரத்தம்: தனது தனித்துவமான கலாய் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் அமுதன், இம்முறை ரத்தம் என் தலைப்பில் சீரியஸான அரசியல் கதைக்களத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் கடந்த மாதம் 6ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் கதை: பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் செய்தியாளராக இருந்த செழியனை, ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான். தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியதால், கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார். ஆனால், இந்த கொலையை அந்த இளைஞன் ஏன் செய்கிறார்? என்று தெரியவில்லை.
சிறப்பான நடிப்பு: இந்த சூழ்நிலையில், புலனாய்வு பத்திரிக்கையாளரான விஜய் ஆண்டனி இந்த கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார். இறுதியில் இந்த கொலைகள் ஏன் நடக்கிறது? அந்த கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மிதி கதை. பெயருக்கு ஏற்றார் போல ரத்த வாடை வீசும் இந்த படத்தில், விஜய் ஆண்டனி தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.
ஓடிடி ரிலீஸ் தேதி: கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ரத்தம் திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











