Vijay Antony 25: S.K 25 டைட்டிலை தட்டித்தூக்கிய விஜய் ஆண்டனி 25.. பராசக்தி டைட்டிலுக்கு செம போட்டி

சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகராகவும் ஜொலித்து வருகிறார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், சினிமாவில் நடிப்பது, இசை அமைப்பது என தொடர்ந்து செம பிஸியாக இருந்து வருகிறார். இவரது இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு உள்ளது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் 25 வது படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சிவகார்த்திகேயன் தற்போது தனது 25 வது படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இந்தப் படம் முதலில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர், அதிலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். படம் 1960 கால கட்டங்களில் நடப்பதை மையமாகக் கொண்டது என கூறப்படுகிறது.

shakthi thirumagan parashakthi vijay antony

படத்தின் டைட்டில் டீசர் இன்று அதாவது ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படக்குழு தரப்பில் இருந்து நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தது. அதில் சிவகார்த்திகேயன் தனது கையில் ஒரு பெட்ரோல் குண்டினை வைத்துக் கொண்டு, ஆக்ரோஷமாக நிற்கின்றார். பிளாக் அண்ட் ஒயிட்டில் உள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் டீசர் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு பராசக்தி என்ற பெயரினை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் அடிபடுகின்றது.

பராசக்தி: அப்படி இருக்கும்போது, விஜய் சேதுபதியின் 25வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்தப் படத்திற்கு மொத்தம் இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, தமிழில் இந்தப் படத்திற்கு சக்தித் திருமகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் படத்திற்கு பராசக்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

shakthi thirumagan parashakthi vijay antony

விஜய் ஆண்டனி 25: இது தொடர்பாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கின்றனர். படத்தினை வரும் கோடை காலத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையும் அமைக்கின்றார். இந்த அறிவிப்புடன், "புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா " என கேப்ஷனும் இட்டுள்ளது படக்குழு. இந்த தலைப்பு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X