சாரிப்பா.. தப்பா நினைச்சுட்டேன்.. நான் தான் திருந்தனும்போல.. விஜய் ஆண்டனி இப்படி சொல்ல என்ன காரணம்?
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அருவி மற்றும் வாழ் படங்களை எழுதி இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படம் விஜய் ஆண்டனியின் 25வது படம் என்பதால் இந்த படத்தின் மீது தனி கவனம் குவிந்துள்ளது. இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 24 ஆம் தேதி விஜய் ஆண்டனியின் 50வது பிறந்த நாள் என்பதால், சக்தித் திருமகன் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு பதிலாக, பிரியாணி வெட்டிக் கொண்டாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.
சக்தித் திருமகன் படம் தமிழில் இதே பெயருடனும் மற்ற மொழிகளில் பராசக்தி என்ற டைட்டிலிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி படத்திற்காக மற்ற மொழிகளில் விஜய் ஆண்டனி வாங்கி வைத்திருந்த டைட்டில் உரிமத்தை விட்டுக் கொடுத்திருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் சக்தித் திருமகன் ரிலீஸ் ஆகவுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி பிறந்த நாள்: இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, சக்தித் திருமகன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரித்து இசையும் அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் தரப்பில் இருந்து, வழக்கமாக சிங்கிள்ஸ் தானே வெளியிடுவார்கள், நீங்கள் என்ன டபுள்ஸ் வெளியிடுகிறீர்கள்? படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
மன்னிப்பு: ஆனால் செய்தியாளரின் கேள்வியை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத விஜய் ஆண்டனி, டபுள்ஸ் என்ற வார்த்தையை வேறு விதமாக புரிந்து கொண்டு நன்றாக சிரித்தார். அதன் பின்னர் செய்தியாளர் தனது கேள்வியை மீண்டும் விளக்கிய பின்னர், விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டார். அதாவது, "சாரிப்பா.. தப்பா நினைச்சுட்டேன்.. நான் தான் திருந்தனும்போல" எனக் கூறினார். இவரது இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆந்தை - பிரியாணி: விஜய் ஆண்டனியின் முந்தைய படமான மார்கன் படத்தில் ஆந்தை மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. இதனால் மார்கன் படத்தின் எல்லா புரோமோஷன்களிலும் ஆமை பொம்மையை வைத்திருந்தார். மார்கன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் ஆமை பொம்மைக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஆமை மீது தேவையில்லாமல் கட்டுக்கதையை கட்டி விட்டுள்ளார்கள் எனவே நான் அதை மாற்றவே இவ்வாறு செய்கிறேன் எனக் கூறியுள்ளார். அதேபோல் அவரது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடாமல் பிரியாணி வெட்டிக் கொண்டாடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர், எப்போது தான் நீங்கள் செருப்பு அணிவீர்கள் என்று கேட்டதற்கு, செருப்பு இல்லாமல் நடப்பது நன்றாக உள்ளது, நீங்களும் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் எனவும் கூறினார்.


Click it and Unblock the Notifications











