Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் ஆண்டனி, ஆத்மிகாவின் அரசியல் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.. இதுதான் டைட்டிலா?
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ஆத்மிகா நடிப்பில் உருவாகி வரும் அரசியல் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்த நிலையில், உடனடியாக இந்த படத்தின் வேலைகளை விஜய் ஆண்டனி தொடங்கி உள்ளார்.
'என் மீதான கோபத்தை மறவேன்..' டைரக்டர் சேரனுடன் என்னதான் பிரச்னை? விஜய் பட இயக்குனர் விளக்கம்!

யார் இயக்குநர்
நடிகர் வித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற ‘ஆள்' மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தை மையமாக வைத்து கோலிவுட் ரசிகர்களையே பதற வைத்த ‘மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக இந்த படத்திற்கு பூஜைப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆத்மிகாவின் அடுத்த படம்
மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு நடிகை ஆத்மிகா நரகாசூரன் மற்றும் காட்டேரி ஆகிய இரு படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அந்த இரு படங்களும் இதுவரை வெளியாகவே இல்லை. நரகாசூரன் எப்போது ரிலீசாகும் என்பது இயக்குநருக்கே தெரியாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்த அரசியல் படத்தில் இணைந்துள்ளார் ஆத்மிகா.

இரண்டாவது முறையாக
ஏற்கனவே அரசியல் த்ரில்லர் படமான ‘எமன்' படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அரசியல் த்ரில்லர் படத்தை விஜய் ஆண்டனி தேர்வு செய்துள்ளார். இந்த படத்திற்கு ‘அன்பு இல்லையெனில் ஒரு அணுவும் அசையாது' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஷூட்டிங் தொடக்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், 75 பேர் படக்குழுவுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஷூட்டிங்கை நடத்த விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழு திட்டமிட்டு, ஷூட்டிங்கை தொடங்கி உள்ளனர்.

ஏகப்பட்ட படங்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கனவே அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்கள் பல கட்ட நிலைகளில் தயாரிப்பு பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த படங்களும் முழுமையாக தயாரிப்பு பணிகள் நிறைவுபெற்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.