விஜியை கைபிடித்து இழுத்து செல்லும் சீனு
சென்னை : அக்னி சிறகுகளின் ஐரோப்பிய படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பி இருக்கும் படக்குழு ,படத்தின் மற்ற வேலைகளை செய்து வருகிறது .
மூடர் கூடம் மற்றும் அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கு பிறகு அக்னி சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் நவீன் .படம் கொல்கத்தாவில் எடுக்கபட்டதை அடுத்து படக்குழு ஐரோப்பிவில் பல நாட்களாக விறுவிறுப்பான படப்பிடிப்பை நடத்தி வந்தது . தற்போது படக்குழு படத்தை பற்றிய சில தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது .அதில் படத்தின் கதாபாத்திரங்களில் சிலரின் பெயரை அறிவித்திருக்கிறது .அதில் விஜய் ஆண்டனி சீனு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ,அக்ஷரா ஹாசன் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ,ரைமா சென் ஸ்மித்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


தற்போது படத்தின் ஒரு படப்பிடிப்பு போட்டோ படக்குழுவால் வெளியிடபட்டிருக்கிறது ,அதில் அக்ஷரா ஹாசன் கையை பிடித்து இழுத்து செல்கிறார் விஜய் ஆண்டனி ,அந்த புகைப்படத்தை பாரக்கும் போது அக்ஷரா ஹாசன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது.மேலும் அந்த புகைப்பபடம் வீடுகளின் மாடி மேல் விஜய் ஆண்டனி அக்ஷராவை இழுத்து ஒடுகிறார்.இதை பாரக்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. பொதுவாக போஸ்டர் பார்த்து கதையை முடிவு செய்ய முடியாது தான் . இருந்தாலும் சில போஸ்டர்கள் சில கற்பனையை தூண்டுகின்றன . அம்மா கிரியேஷன்ஸ் ஷிவா இந்த படத்தை மிக பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மிக கடுமையாக உழைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











