“ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்“… அக்னி சிறகுகள் மிரட்டலான டீசர் அவுட் !

சென்னை : நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து அக்னி சிறகுகள் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது.

மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இப்படத்தை இயக்கி உள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சராஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அக்னி சிறகுகள். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே படத்தில் இருந்து வெளியேறி விட்டதை அடுத்து, அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசன் அந்த படத்தில் ஒப்பந்தமாகி அந்த காட்சிகளில் நடித்து வருகிறார்.

தோத்தவன் செத்துருவான்

தோத்தவன் செத்துருவான்

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், அருண் விஜய்யின் குரலில், பழைய ரொமன் அரேன் பார்த்து இருக்கியா நண்பா... இரண்டு கிளாடியேட்டர் சண்டைப்போடுவாங்க. தோத்தவன் செத்துருவான், ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான். உயிரோட இருந்தா அப்படி ஒரு வெற்றியோட உயிரோட இருக்கனும்.

நண்பா..

நண்பா..

நண்பா.. இந்த மைதானத்திலிருந்து ஒருத்தன் மட்டும்தான் உயிரோட போக முடியும் அது ஜெயிக்குறவன் மட்டும்தான்... முடிஞ்சா என்ன ஜெயிச்சிக்கோ என ஆக்ரோஷமான குரலில் அருண்விஜய் அனல் தெறிக்க வசனம் பேசி உள்ளார். அந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் ரிலீஸ்

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனியின் காம்போ புதியதாக இருந்தாலும், டீசர் மிரட்டலாக அமைந்து. படம் எப்படி இருக்கும் ? என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X