பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!

சென்னை : நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் அன்பிற்கினியாள் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்க எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களை தொடர்ந்து திரைப் பிரபலங்கள் விஜய் ஆண்டனி, அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட பலர் அன்பிற்கினியாள் படத்தை பார்த்துவிட்டு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியானது

திரையரங்குகளில் வெளியானது

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஹெலன் திரைப்படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இந்த படம் மார்ச் 5ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்திரம், ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மேலும் நடிகர் அருண்பாண்டியன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

துளியும் சுவாரசியம்

துளியும் சுவாரசியம்

வெளிநாடு செல்லும் கனவுகளோடு இருக்கும் கீர்த்தி பாண்டியன் மாலில் ஒரு உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் ஒரு நாள் நாளில் காணாமல் போகிறார் அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை துளியும் சுவாரசியம் குறையாமல் காட்டியிருக்க படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டுள்ளது.

வித்தியாசமான முயற்சி

வித்தியாசமான முயற்சி

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருக்கும் அன்பிற்கினியாள் படத்தை பல திரைப் பிரபலங்களும் பார்த்துவிட்டு வாழ்த்துக்களைக் கூறி இருக்க நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அன்பிற்கினியாள் படத்தை பார்த்தேன் ரொம்பவும் வித்தியாசமான கதை வித்தியாசமான முயற்சி, அருண்பாண்டியன் சார் ரொம்ப நாள் கழிச்சி பண்ணியிருக்காரு, படத்தோட ஹீரோயின் ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறார். அவர் தப்பித்து வெளியில் வரும்போது நாமளே தப்பித்து வெளியே வந்தது போல இம்பாக்ட் கொடுத்துள்ளது இந்த படம் . ரொம்ப நல்லா இருக்கு நீங்களும் அவசியம் எல்லாரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரானரி பர்ஃபாமன்ஸ்

எக்ஸ்ட்ரானரி பர்ஃபாமன்ஸ்

மேலும் நடிகர் அசோக் செல்வன் அன்பிற்கினியாள் படத்தை பார்த்துவிட்டு கூறியதாவது " சூப்பரா இருக்கு படம் செம்மையா இருக்கு, குறிப்பாக படம் முடிந்த உடனேயே என்னுடைய மைண்ட் முழுவதும் இருப்பது கீர்த்தி பாண்டியனின் நடிப்பு மட்டும்தான். எக்ஸ்ட்ரானரி பர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்காங்க அதுவும் இரண்டாவது படத்திலேயே இப்படி ஒரு எக்சலண்ட்டான பர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்காங்க. அடுத்து அருண்பாண்டியன் சார் ரொம்ப வருஷம் கழிச்சி மீண்டும் நடிக்கிறார் மீண்டும் அவரை திரையில் காண சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரும் நல்லா பண்ணி இருக்காங்க இயக்குனர் கோகுல் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இந்தப் படம் ஒரு வின்னர் கமர்ஷியலாக மிகப்பெரிய ஹிட்டாகும் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

சூப்பரா நடிச்சு இருக்காங்க

சூப்பரா நடிச்சு இருக்காங்க

மேலும் படத்தை பற்றி நடிகர் சதீஷ் கூறியிருப்பதாவது " கீர்த்தி பாண்டியன் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காங்க, இயக்குனர் கோகுல் கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு படத்தை நாங்க எதிர்பார்க்கல, ஏன்னா டோட்டலா அவரு வேற மாதிரி ஜானர் பண்ணிட்டு இருந்தவரு இதுல எல்லாமே சூப்பரா அதுவும் புதுசா பண்ணியிருக்காங்க. படம் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு எல்லாரும் வந்து தியேட்டர்ல பாருங்க. என தன்னுடைய வழக்கமான கலகலப்பான பேச்சின் மூலம் அன்பிற்கினியாள் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X