விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்தில் ரித்திகா சிங்குடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜியின் அடுத்த டைரக்ஷனில் உருவாகவுள்ள படத்தில் இவர்கள் இருவரும் இணையவுள்ளனர்.

தொடர் வெற்றிப் படங்கள்
நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களுடன் இவரது படங்கள் தொடர்ச்சியாக வந்து வெற்றியும் பெறுகிறது. தனது தயாரிப்பிலும் படங்களை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

தொடர்ச்சியான படங்கள்
இந்நிலையில் மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இவரது ஆக்ஷன் த்ரில்லர் படம் கோடியில் ஒருவன் சிறப்பான வகையில் உருவாகி வருகிறது. அடுத்ததாக அக்னி சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
Recommended Video

விஜய் ஆண்டனி ஒப்புதல்
இந்நிலையில் விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு விஜய் ஆண்டனி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாலாஜியின் கதை பிடித்துப் போனதையடுத்து தற்போது இந்த கதைக்கு விஜய் ஆண்டனி ஒப்புதல் அளித்துள்ளார்.

விரைவில் சூட்டிங்
பாலாஜி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து படம் செய்யவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இது உறுதியாகியுள்ளது. இந்த படத்ல் ரித்திகா சிங் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். விஜய் ஆண்டனி தற்போது நடித்துவரும் படங்கள் முடிந்தபின்பு இந்த படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











