விஜய் பிறந்தநாளுக்கு கூட ஜனநாயகன் வருவது டவுட்டு தான்.. விஜய் ஆண்டனியின் நூறு சாமி தான் வருது!
சென்னை: ஆர்ஜே பாலாஜி விஜய்யை சந்தித்தது சூர்யா ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து சத்தமே இல்லாமல் விஜய் ஆண்டனி திடீரென முதலமைச்சர் விஜய்யை ஏன் சந்தித்தார் என்கிற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
வரும் ஜூன் 19ம் தேதி விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள நூறு சாமி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதனை முன்னிட்டுத்தான் விஜய் ஆண்டனி முதலமைச்சர் விஜய்யை நேற்று சந்தித்துள்ளார் என்கின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 18ம் தேதி ஜனநாயகன் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்றே தெரிகிறது. மேலும், ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைப்பதில் என்ன சிக்கல் இன்னமும் நிலவுகிறது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
ஜனநாயகன் சென்சாரில் என்ன பிரச்னை?: ஜன நாயகன் படத்தை தேர்தலுக்கு முன்னதாக வெளியிட வேண்டும் என்பதில் விஜய் மற்றும் கேவிஎன் டீம் தீவிரம் காட்டியது. விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்னதாக ஆளுநரை சந்தித்த போது கூட கேவிஎன் தயாரிப்பாளர் உடன் சென்றிருந்தார். ஜன நாயகன் திரைப்படம் சென்சார் முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறினார். ஆனால், திடீரென படத்தின் இயக்குநர் அந்த படத்தில் உள்ள பிரச்னையை சொல்லும் தைரியம் எனக்கு இருக்கு. ஆனால், போடும் தைரியம் உங்களுக்கு இல்லை என்று பொடி வைத்து பேசினார். தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆன பின்னரும் ஜனநாயகன் பஞ்சாயத்து ஏன் தீரவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
விஜய்யை சந்தித்த விஜய் ஆண்டனி: விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் தான் விஜய் ஆண்டனி குடியிருந்தார். சுக்கிரன் படத்தில் இசையமைத்து பிரபலமானார். வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் இசையமைத்து விஜய்யுடன் நல்ல நட்பு வட்டத்தில் இருந்து வந்தாலும், திடீரென தற்போது விஜய் ஆண்டனி ஏன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், ஜனநாயகன் வெளியாகுமா? ஆகாதா? என்னோட படத்தை ரிலீஸ் செய்யலாமா எனக் கேட்கத்தான் விஜய் ஆண்டனி சிஎம் விஜய்யை சந்தித்ததாக பேச்சுக்கள் கசியத் தொடங்கியுள்ளன.
நூறு சாமி ரிலீஸ் தேதி: ஜன நாயகன் திரைப்படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 18 அல்லது ஜூன் 19 வெளியாகாது என்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தெளிவாக தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பிச்சைக்காரன் படத்தை போலவே விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் இந்த நூறு சாமி பிளாக்பஸ்டர் படமாக மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெற்றிப் பெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கும் ஒரு கம்பேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications