மகள் உயிரிழந்து 10 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள பட புரமோஷன்.. விஜய் ஆண்டனி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: விஜய் ஆண்டனி, நந்திதா, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படம் அடுத்த வாரம் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டது விஜய் ஆண்டனியின் குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Vijay Antony attends Ratham press meet and shares why he attend this promotion

இந்நிலையில், மகள் இறந்து 10 நாள் கூட ஆகல, அதுக்குள்ள பட புரமோஷனுக்கு வந்துட்டாரே என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், ரத்தம் படத்தின் பிரஸ்மீட்டில் அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக விஜய் ஆண்டனியின் பேச்சு இருந்தது நெகிழ வைக்கிறது.

மூத்த மகள் மரணம்: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக உடைத்து விட்டது. விஜய் ஆண்டனி இந்த பெரிய இழப்பில் இருந்து மீண்டும் எழுந்து வர வேண்டும் என்றும் அவருக்கு மன வலிமையை இறைவன் கொடுக்க வேண்டும் என பலரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

Vijay Antony attends Ratham press meet and shares why he attend this promotion

ரத்தம் புரமோஷனுக்கு வந்த விஜய் ஆண்டனி: இந்நிலையில், நேற்று ரத்தம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி வந்திருந்தார். மகள் இறந்து 10 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், விஜய் ஆண்டனி சினிமா பட புரமோஷனுக்கு வந்துள்ளாரே என சோஷியல் மீடியாவில் அவரது ஹேட்டர்கள் வெறுப்பை உமிழ ஆரம்பித்துள்ளனர்.

Vijay Antony attends Ratham press meet and shares why he attend this promotion

விஜய் ஆண்டனி பேசியது என்ன?: தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 6ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. சி.எஸ். அமுதனின் தந்தை தான் இசையே தெரியாத தனக்கு இசை கற்றுக் கொடுத்த குரு என்றும் மியூசிக்கை எனக்கு இலவசமாக எளிமையாக கற்றுக் கொடுத்தார். அந்த நன்றிக் கடனை நான் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என மன வேதனையுடன் ரத்தம் பட பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்ட விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

நாங்க இருக்கோம்: அதற்கு முன்னதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் பேசும் போது, படக்குழுவினர் யாருமே விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து பேசுவதை தவிர்த்து அமைதியான முறையில் அந்த நிகழ்ச்சியில் பேசினர். விஜய் ஆண்டனிக்கு முன்னதாக பேசிய இயக்குநர், என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் தந்த ஒரே மனிதர் விஜய் ஆண்டனி தான். அவர் அப்போது, சொன்ன வார்த்தைகளையே நான் இப்போது சொல்கிறேன், இதை பேசக் கூடாதுன்னு தான் இருந்தோம்.. ஆனால், மனது கேட்கவில்லை, "நாங்க இருக்கோம் பிரதர்" என விஜய் ஆண்டனிக்கு மேடையிலேயே ஆறுதல் கூறியிருந்தார் சி.எஸ். அமுதன்.

பத்திரிகையாளர் சந்திப்பு மட்டுமின்றி சில யூடியூப் பேட்டிகளிலும் சி.எஸ். அமுதன், மஹிமா நம்பியார், நந்திதா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி பேசியுள்ள வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X