சலீம் பட வெற்றி... ஆளுயர மாலை, வீரவாள்.. முழு ஹீரோவாக மாறிய விஜய் ஆன்டனி!
நான் படம் வெற்றி பெற்ற போதே, இசையமைப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டவர் விஜய் ஆன்டனி. இப்போது சலீம் படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் முழுநேர ஹீரோவாகிவிட்டார்.
இன்று நடந்த வெற்றி விழாவில் அவருக்கு ஆளுயர பெரிய மாலை போட்டு, கையில் வீர வாள் கொடுத்து அவரை கொண்டாடினார்கள் படக்குழுவினரும் ரசிகர்களும்.

சலீம்
விஜய் ஆன்டனி - அக்ஷா பர்தசானி நடிக்க, என்வி நிர்மல்குமார் இயக்கத்தில் வெளியான படம் சலீம். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

வெற்றி விழா
இந்தப் படத்தின் வெற்றியை செய்தியாளர்களுடன் இன்று காலை பகிர்ந்து கொண்டார் விஜய் ஆன்டனி. பெரிய கேக்கை வெட்டி இந்த வெற்றியை அவர் கொண்டாடினார். உடன் அவரது மனைவியும் படத்தின் தயாரிப்பாளருமான பாத்திமாவும் இருந்தார்.

ஆளுயர மாலை
விஜய் ஆன்டனிக்கு ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசளித்து கவுரவித்தனர்.

இனி முழு ஹீரோதான்
இனி இசையமைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ள விஜய் ஆன்டனி, தன் சொந்தப் படங்களுக்கே வெளி இசையமைப்பாளர்களைத்தான் ஒப்பந்தம் செய்துள்ளார்.

முன்னணி நாயகன்
தொடர்ந்து இரு ஹிட் படங்கள் கொடுத்துவிட்டதால், இப்போது முன்னணி நாயகனாக மாறியுள்ளார் விஜய் ஆன்டனி. நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.

மூன்று படங்களில்
ஆனாலும் இப்போதைக்கு இந்தியா - பாகிஸ்தான், திருடன் என இரு படங்களில் மட்டும் நடிக்கிறார். அடுத்ததாக சலீமின் தொடர்ச்சியைத் தயாரித்து நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











