உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும்.. நடிகர் விஜய் ஆண்டனி கோபம்.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி "உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்" என போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நான், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் என பல ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், இப்படியொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

புதிய படங்கள் வெளியாகாமல் போகும் விரக்தியால் பேசுகிறாரா? அல்லது மக்கள் கொடிய நோய்க்கு தினமும் பலியாகி வருகின்றனரே என்கிற பரிதாபத்தால் பேசியுள்ளாரா என கமெண்ட் பக்கத்தில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

ஓடவிடும் ஓமிக்ரான்

ஓடவிடும் ஓமிக்ரான்

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் அப்கிரேட் வெர்ஷன் ஓமிக்ரான் மக்களை ஓடவிட்டு வருகிறது. 2022ம் ஆண்டாவது சிறப்பாக அமையும் என்று பார்த்தால் ஜனவரி மாதமே 3வது அலை விஸ்வரூபம் எடுத்து விட்டது.

தியேட்டர்கள் மூடப்படுமா?

தியேட்டர்கள் மூடப்படுமா?

கொரோனா பரவல் காரணமாக ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம், அஜித் குமாரின் வலிமை உள்ளிட்ட படங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் பல பொங்கலுக்கு வர முடிவு செய்திருக்கின்றன. ஆனால், விரைவில் தியேட்டர்கள் மூடப்படும் என்கிற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது தான் விஜய் ஆண்டனியின் இந்த ஆதங்கத்திற்கு காரணமா? என்கிற கேள்வியை எழுப்புகிறது.

விஜய் ஆண்டனி ஆதங்கம்

விஜய் ஆண்டனி ஆதங்கம்

இந்த தகவல் தெரிந்த நிலையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆதங்கம் அடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு விரக்தியை வெளிப்படுத்தும் ட்வீட்டை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து சினிமா துறையை கொரோனா பெரும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத்தை அழிச்சுடுங்க

உலகத்தை அழிச்சுடுங்க

கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும் எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன் என தனது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார் விஜய் ஆண்டனி.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு ட்விட்டர் வாசிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. கொரோனா பணக்காரனை எப்படி பெரிய பணக்காரன் ஆக்குகிறது என்கிற கேள்வியை சிலர் கேட்டு வருகின்றனர். ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்த அணுகுண்டு பாதிப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா என்றும் அவர் விரக்தியின் வெளிப்பாடாய் அப்படி பேசி உள்ளார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X