Pichaikkaran 2: நிஜமா இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது.. பிரியாணி பரிமாறிய விஜய் ஆண்டனி!

சென்னை: இந்த சம்மர் விடுமுறையை பல முன்னணி நடிகர்கள் தவற விட்ட நிலையில், அதனை கச்சிதமாக பிடித்துக் கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தைக் களமிறக்கி வசூல் வேட்டை ஆடியுள்ளார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அந்த வெற்றியை கொண்டாட ஏழை மக்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை விஜய் ஆண்டனி ஷேர் செய்துள்ள நிலையில், பல பிரபலங்களும் ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Vijay Antony celebrates Pichaikkaran 2 success with Beggars and feast them with Biriyani party

பிச்சைக்காரன் 2 வசூல்:

விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த வாரமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்தவொரு குறையுமின்றி பிச்சைக்காரன் 2 அதிகபட்சமாக 35 கோடி ரூபாயை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

பிச்சைக்காரன் 2 வெற்றியை கொண்டாட நினைத்த விஜய் ஆண்டனி தன்னுடைய படக்குழுவினருடன் அதனை கொண்டாடாமல் பிச்சைக்காரர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் அதனை கொண்டாடிய வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Vijay Antony celebrates Pichaikkaran 2 success with Beggars and feast them with Biriyani party

பிச்சைக்காரர்களுக்கு பிரியாணி விருந்து:

நல்ல உயர்ரக ஹோட்டலுக்கு 20க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்ற விஜய் ஆண்டனி அந்த ஹோட்டலில் அவர்களுக்கு கிரில் சிக்கன், பிரியாணி என அசைவ உணவுகளையும் குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றையும் தன் கையாலே பரிமாறி அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

மேலும், அவர்களின் குழந்தைகளுடனும் அவர்களுடனும் அந்த சின்ன போன் கேமராவில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

ஏழையின் சிரிப்பில் இறைவன்:

அந்த குழந்தைகள் பிரியாணியையும் கிரில் சிக்கனையும் சாப்பிடும் போது அவர்கள் முகத்தில் தோன்றிய அந்த சிரிப்பு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற பழமொழியை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

பிச்சைக்காரன் 2 பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனியை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் பாராட்டு:

"எம்ஜிஆர பாத்ததில்ல ஒன்னத்தான் நாம் பாத்தோம்..
ஏழமக்கள் எல்லோரும் நீ நீடுவாழக்கேட்டோம்.. சொன்னதெல்லாம் செய்வதற்கு எங்க அண்ணன் வந்தாரு.. துன்பங்களே கண்டெமக்கு.. இல்லை இனி கண்ணீரு.." என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Vijay Antony celebrates Pichaikkaran 2 success with Beggars and feast them with Biriyani party

எமோஷனலான ரசிகர்கள்:

வேறலெவல் விஜய் ஆண்டனி சார் என்றும் நல்ல விஷயம் பண்ணிருக்கீங்க விஜய் ஆண்டனி சார், பிச்சைக்காரன் 3 படத்துக்கு காத்திருக்கிறோம் என ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு விஜய் ஆண்டனியை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X