இங்க யாருக்கும் எதுவும் தெரியாது.. என்னங்க இப்படி சொல்லிட்டாரு விஜய் ஆன்டணி!

சென்னை : நடிகர் விஜய் ஆன்டணி நடிப்பு, இசை மற்றும் தயாரிப்பு என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்.

ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறப்பான இசையை கொடுத்துவரும் விஜய் ஆன்டணியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் அவர் அவதாரம் எடுக்கவுள்ளார். இதன் முதல் பாகம் அவருக்கு சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகர் விஜய் ஆன்டணி

நடிகர் விஜய் ஆன்டணி

நடிகர் விஜய் ஆன்டணி இசையமைப்பாளராக ரசிகர்களிடம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். திரைத்துறையில் தனது அடுத்த நகர்வாக இவர் நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

சிறப்பான பிச்சைக்காரன் படம்

சிறப்பான பிச்சைக்காரன் படம்

நான், சலீம் என சிறப்பான படங்களை கொடுத்த இவர், ஆக்ஷன் அவதாரத்திலும் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் இவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. சிறந்த நடிகராகவும் ஏற்க வைத்தது.

இயக்கத்திலும் விஜய் ஆன்டணி

இயக்கத்திலும் விஜய் ஆன்டணி

அடுத்ததாக இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன், ரத்தம், கொலை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார் விஜய் ஆன்டணி. பிச்சைக்காரன் 2 படத்தை இவர் இயக்கி வருகிறார். இசையமைப்பு, தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.

யாருக்கும் எதுவும் தெரியாது

யாருக்கும் எதுவும் தெரியாது

ஆனாலும் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அவரது குணம் மட்டும் தொடர்ந்து வருகிறது. அதற்கான காரணத்தையும் தற்போது பேட்டி ஒன்றின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் பெரிய பணக்காரனும், ஏழைக்கும் பிச்சைக்காரனுக்கும் எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

அனைவரும் ஒன்றுதான்

அனைவரும் ஒன்றுதான்

மற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்துள்ளது என்று யாருடனும் நம்மை கம்பேர் செய்யாமல் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு கோடிகளை வைத்திருந்தாலும் அதிகமாக படித்திருந்தாலும் அனைவரும் ஒரு 70 வயதில் சாகத்தான் போகிறார்கள் என்று கூறியுள்ள விஜய் ஆன்டணி, இதனால் அனைவரும் ஒன்றுதான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அமைதியா ட்ராவல் பண்ணுங்க

அமைதியா ட்ராவல் பண்ணுங்க

நாம் இருக்கும் இடத்திலிருந்து அமைதியாக ட்ராவல் பண்ணலாம், படுத்துத் தூங்கலாம் நமக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், இதுதான் சந்தோஷம் என்றும் சந்தோஷம் என்பதை மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதன்மூலம் அனைத்தையும் ரசிக்கும் குணம் தானாகவே வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தோஷம் என்பது அமைதி

சந்தோஷம் என்பது அமைதி

தன்னை பொறுத்தவரையில் சந்தோஷம் என்பது அமைதி என்றும் நானும் இருக்க வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பது அமைதியை தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதுதான் அவரது அமைதியான குணத்திற்கு காரணமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X