ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சு..கிறிஸ்தவ சபை கண்டனம்!

சென்னை: ஜீசஸ் கூட குடிச்சிருக்கார், ராஜா காலத்தில் சோமபானம் இருந்தது என ரோமியோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனிக்கு கண்டனம் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது பாடலை கேட்டு குத்தாட்டம் போடாத இளசுகளே கிடையாது அப்படி ஒரு வைபை கொடுத்திருப்பார். இசையமைப்பாளர் வரிசையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. அதிலும், குறைவான படத்திற்கு இசையமைத்து முன்னனி நடிகர்களின் படத்திற்கு கமிட் ஆனவர்.

Vijay Antony controversy Speech at Romeo audio launch event

நடிகர் விஜய் ஆண்டனி: நான் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அந்த படத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சலீம், எமன், சைத்தான், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் என அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குநராக மாறினார்.

ரோமியோ பட ப்ரோமோஷன்: தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் ரோமியோ என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரோமியோ படத்தின் போஸ்டரில் முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் அமர்ந்து இருந்தனர். இந்த போஸ்டர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் இதன் மூலமே விஜய் ஆண்டனி சிக்கியுள்ளார்.

சர்ச்சை பேச்சு: இதுகுறித்து, ப்ரோமோஷனில் விஜய் ஆண்டனியிடம் நிருபர் ஒருவர், பெண்களும் குடிக்கலாமா? என்று கேட்டார். ஆண் குடிக்கிறார் என்றால் பெண்ணும் குடிக்கலாம். ஆண், பெண் இருவரும் சமம்தானே என்று சொல்லி கலாய்த்தார். தமிழகத்துல மதுவை ஒழிக்கனும்னு போராடுறோம். அப்போ குடியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்வியை நிருபர் கேட்க 'அப்படியெல்லாம் இல்லை. ஜீஸஸ் காலத்தில் இருந்தே குடி என்பது வெவ்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

ஜீசஸ் கூட குடிச்சிருக்கார்: மேலும், நான் குடியை ஆதரிக்கவில்லை. ஆண்களை மது குடிக்க வேண்டாம்னு சொன்னால் அது பெண்களுக்கும்தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் சோமபானம் இருந்தது என பேசினார். இது படத்தின் புரமோஷனுக்காக பேசினாரா இல்லை சம உரிமை வேண்டி பேசினாரா என்பது குறித்து எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. விஜய் ஆண்டனி ஜீசஸ் கூட குடிச்சிருக்கார் என்று பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

மனதை புண்படுத்தி விட்டார்: உலகம் எங்கும் வாழும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களாலும் ஜாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X