Vijay Antony: உடற்கூராய்வு முடிந்து வந்த மகளின் உடல்.. கண்டதுமே கதறி அழுத விஜய் ஆண்டனி

சென்னை: விஜய் ஆண்டனிக்கும் பாத்திமாவுக்கும் கடந்த 2007ம் ஆண்டு மகளாக பிறந்த மீரா ஆண்டனி இன்று அதிகாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது விஜய் ஆண்டனியின் குடும்பத்தையே நிலைகுலைய செய்துள்ளது.

காவேரி மருத்துவமனையில் மகள் இறந்து விட்டாள் என்பதை அறிந்த உடனே பதறித்துடித்த விஜய் ஆண்டனி ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கதறி அழுத காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்கி வருகின்றன.

Vijay Antony cried a lot after seeing his daughters body

விஜய் ஆண்டனி மகளின் உடலை வாங்கிக் கொண்டு ஆம்புலன்ஸில் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கே ஏராளமான சினிமா பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகள்: விஜய் ஆண்டனி தனது மூத்த மகளுக்கு மீரா என பெயர் வைத்து ஆசை ஆசையாய் 16 ஆண்டுகள் வளர்த்து வந்தது இப்படி பாதியிலேயே பறிகொடுக்கத்தானா என ரசிகர்களும் பிரபலங்களும் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள விஜய் ஆண்டனிக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம் என்றே தெரியவில்லையே என கதறி வருகின்றனர்.

மகளை பார்த்ததுமே கதறிய விஜய் ஆண்டனி: விஜய் ஆண்டனியின் மகளின் மரண செய்தி கேட்டு சினிமா பிரபலங்களும், பொதுமக்களுமே மனம் பதைபதைத்து வாடி வரும் நிலையில், பெற்று இத்தனை ஆண்டுகள் வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு அவரது மகள் இப்படி உடற்கூராய்வு செய்து பூத உடலாக தனக்கு முன்னதாக இருப்பதை பார்த்தால் தாங்க முடியுமா? மகளை பார்த்ததுமே விஜய் ஆண்டனி கதறி அழுத காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளன.

விஜய் அம்மா நேரில் அஞ்சலி: மன்சூர் அலி கான், சந்தானம், டி. சிவா என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் விஜய் ஆண்டனி வீட்டுக்கு வருகை தந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யும் நேரில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் பல படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல திரையுலக பிரபலங்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X