Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தப் படத்துல நான் நல்லவனா கெட்டவனா? டைரக்டரிடம் கேள்வி எழுப்பிய விஜய் ஆண்டனி
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
ஹாட் ஸ்டாரில் வந்தாச்சு குக் வித் கோமாளி 3...இன்னிக்கு என்ன நடக்க போகுது தெரியுமா?
இந்நிலையில் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பான பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான கொலைகாரன், காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் என்ற அனைத்து படங்களும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

சிறப்பான கோடியில் ஒருவன் படம்
அந்த வகையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. முதலில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியானது.

விஜய் ஆண்டனியை இயக்கும் சிஎஸ் அமுதன்
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் சிஎஸ் அமுதன். இவர் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை இன்ஃபினிட் ஃபிலிம் வெஞ்சூர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வித்தியாசமான தலைப்பு
எப்போதுமே விஜய் ஆண்டனியின் படங்கள் வித்தியாசமான தலைப்புகளை கொண்டிருக்கும். அந்த வகையில் இந்தப் படத்திற்கு தற்போது ரத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

ரத்தம் தலைப்பு
படத்தில் அண்ணாதுரை படத்தில் வருவது போல அதிகமான தாடி, மீசையுடன் விஜய் ஆண்டனி காணப்படுகிறார். கண்ணாடியில் சாய்ந்தபடி இருட்டான சூழலில் இந்த பர்ஸ்ட் லுக் காணப்படுகிறது. மேலும் படத்திற்கு ரத்தம் என்று வைக்கப்பட்டுள்ள தலைப்பும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இயக்குநரிடம் கேள்வி
இந்நிலையில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி, டைரக்டர் சிஎஸ் அமுதனிடம் தான் படத்தில் நல்லவனா கெட்டவனா என்று கேள்வி எழுப்பியுள்ளார். போஸ்டரை பார்த்தவுடன் நமக்கும் இந்தக் கேள்வியையே கேட்கத் தோன்றுகிறது.

சீரியஸ் களம்?
முன்னதாக தன்னுடைய தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகியப்படங்களின் மூலம் தாறுமாறான காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தவர் சிஎஸ் அமுதன். ஆனால் அவரது இந்தப் படத்தின் தலைப்பும் போஸ்டரும் வேறு வகையில் காணப்படுகிறது. அவர் ரசிகர்களுக்கு காமெடி கலாட்டாவை அளிப்பாரா அல்லது மிகவும் சீரியசான கதைக்களத்தை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.