Vijay Antony: அவ நல்லா படிக்கிற பொண்ணு.. இது ஏதோ வேற விஷயம்.. பிரபல தயாரிப்பாளர் வருத்தம்

சென்னை: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை திடீரென தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது உடலை காவேரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கே உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவித்த நிலையில், அவரின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், தற்போது உடல் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Vijay Antony daughter comits suicide and death shocks Producer T Siva badly

விஜய் ஆண்டனியின் மகள் மரணத்தை அறிந்த திரையுலகினர் பலரும் விஜய் ஆண்டனி வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர் டி. சிவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் ஆண்டனி மகள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நல்லா படிக்கிற பொண்ணு: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல திறமைகளை கொண்ட விஜய் ஆண்டனியை போலவே அவரது மூத்த மகள் மீராவும் திறமையான பொண்ணு என்றும் படிப்பில் கெட்டிக்காரி என்றும் பள்ளியில் பல விருதுகளை எல்லாம் பெற்றுள்ளார்.

எப்போதுமே ஆக்டிவாக இருக்கக் கூடிய பெண் அவர் போய் தற்கொலை செய்துக் கொண்டார் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. இங்கே வர வரைக்கும் அது பொய்யான செய்தி தான் என்றே நினைத்து வந்தேன். ஆனால், மார்சரிக்கு கொண்டு போயிட்டாங்க என்பதை அறிந்ததும் உடைஞ்சி போயிட்டேன்..

வேறு ஏதோ பிரச்சனை: 12வது படிக்கிறதுனால அந்த குழந்தை உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு செல்லும் என என்னால நம்ப முடியல, வேறு ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும், அவர் அப்பாவிடம் அப்படி மனம் விட்டு பேசக் கூடியவர்.. விஜய் ஆண்டனி தனது குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார்.

அவருடைய மகளுக்கு இப்படி ஆகிவிட்டது என நினைக்கும் போது மனம் பதறுகிறது. விஜய் ஆண்டனியை ஃபேஸ் பண்ணக் கூட எனக்கு பயமா இருக்கு என தயாரிப்பாளர் டி. சிவா பேசியுள்ளார்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X