Meera Vijay Antony: அவ Depression-ல தற்கொலை பண்ணிக்கிற ஆளே இல்லை.. மீரா தோழியின் பெற்றோர்கள் பேட்டி
சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டது.
மீராவின் மரணத்தை அறிந்த அவரது பள்ளித் தோழிகள் மற்றும் தோழிகளின் பெற்றோர்கள் என பலரும் மீராவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

மீரா தோழிகளின் பெற்றோர்கள் பேட்டி: அப்போது மீடியாக்களிடம் பேசிய மீராவின் தோழிகளின் பெற்றோர்கள், விஜய் ஆண்டனியின் மகள் ஒரு ஆம்பள பையனை போல போல்டா இருப்பா எப்போதுமே பேண்ட், ஷர்ட் உடையில் தான் ஒரு டாம் பாய் போலவே வலம் வருவார்.
எதற்குமே கவலைப்பட்டதை போல நாங்கள் பார்த்ததே கிடையாது. பள்ளியில் அனைவரிடமும் கலகலப்பாகப் பேசிப் பழகக் கூடியவர். அவர் டிப்ரஷனில் தற்கொலை செய்து கொண்டார் என்பதை எங்களால் ஜீரணிக்கவே இருக்கவே முடியவில்லை. டிப்ரஷனில் இருப்பவர்களை கூட ஜாலியாக பேசி ஹாப்பி ஆக்கக் கூடியவள் மீரா.
டிப்ரஷனுக்கு வாய்ப்பே இல்லை: ஆனால், அவளுக்கு எப்படி திடீரென இப்படி ஒரு முடிவு வரும் என நிச்சயமாக கனவில் கூட நினைக்கவில்லை. ரொம்பவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. என் மகளோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் சமீபத்தில் நடந்து முடிந்த டீச்சர்ஸ் டேவில் கூட மீரா ஆடிப்பாடி அனைவரையும் அசத்தினார். ஆனால், அவளுக்கு மன அழுத்தம் என சொல்வதெல்லாம் நம்பவே முடியாதது போல உள்ளது.
பள்ளியில் அவளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்தது போல தெரியவில்லை. இருந்திருந்தால் நிச்சயமாக தனது தோழிகளுடன் ஷேர் செய்திருப்பார் எனக்கு மீராவின் தோழிகளின் பெற்றோர்கள் அவரது பிரிவால் வாடி ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
மீராவின் தோழிகளும் மீரா செம போல்டான பொண்ணு அவ எப்படி திடீரென இப்படியொரு முடிவை எடுத்தா என்றே தெரியவில்லை. ரொம்பவே கவலையா இருக்கு விஜய் ஆண்டனி அங்கிள் மற்றும் பாத்திமா ஆன்ட்டி தாங்கவே மாட்டாங்க என பேசியுள்ள காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பள்ளி மாணவர்களிடையே அதிக மன அழுத்தம் ஏற்பட கல்வி சூழல் தான் காரணமாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில், மீராவுக்கு மன அழுத்தமே இல்லை என அவரது நெருங்கிய தோழிகளும், தோழிகளின் பெற்றோர்களும் தெரிவித்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் புகைப்படங்கள்


Click it and Unblock the Notifications











