Vijay Antony : 16 வயசுல தற்கொலை முடிவு ஏன்மா.. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. ரசிகர்கள் குமுறல்

சென்னை: இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டு முன்னிலையில் வலம் வரும் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சினிமாத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#VijayAntony ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Vijay Antony daughter Meera commits suicide, fans shares condolences

12வது படிக்கும் விஜய் ஆண்டனி மகளின் சிறுவயது புகைப்படங்களையும் பள்ளி புகைப்படத்தையும் தற்போது ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வயதில் தற்கொலை முடிவு ஏன்?: விஜய் ஆண்டனி மகளுக்கு அப்படியென்ன மன அழுத்தம் என்றும் இந்த வயதில் இப்படியொரு விபரீதமான தற்கொலை முடிவை ஏன் எடுத்தார் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலருக்கு பல உதவிகளை செய்து வரும் நல்ல மனம் கொண்ட விஜய் ஆண்டனி தனது மகளை சரியாக கவனிக்கவில்லையா என்றும் வீட்டிலேயே மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இப்படி இளம் பெண்ணை தனியாக விடலாமா? என ஏகப்பட்ட கேள்விகளும் கிளம்பி வருகின்றன.

Vijay Antony daughter Meera commits suicide, fans shares condolences

குழந்தை புகைப்படம்: விஜய் ஆண்டனி தனது மகளை கையில் ஏந்திக் கொண்டு உலகத்துக்கு காட்டிய குழந்தை புகைப்படத்தையும் ரசிகர்கள் ஷேர் செய்து இப்படியொரு அவசர முடிவை லாரா எடுக்க வேண்டிய அவசியம் ஏன் என்றும் என்ன பிரச்சனையாக இருந்தாலும், அப்பா அம்மாவிடம் சொல்லியிருந்தால் சரி செய்து வைத்து இருப்பார்களே என ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர்.

Vijay Antony daughter Meera commits suicide, fans shares condolences

அப்பா அறையில் தற்கொலை: விஜய் ஆண்டனி ஊரில் இல்லை என்றும் அவரது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு மீரா தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீராவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், மகளின் மரண செய்தி அறிந்து விஜய் ஆண்டனி மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X