Vijay Antony Daughter: தோழிகளுக்கு டின்னர் கொடுத்த விஜய் ஆண்டனி மகள்.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

சென்னை: Vijay Antony (விஜய் ஆண்டனி) இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று மதியம் 12 மணியளவில் மீராவின் உடல் நுங்கம்பாக்கம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Vijay Antony Daughter Meeras character and death reason talks by Jayanthi Kannappan

விஜய் ஆண்டனி மகள் மறைவு செய்தி அறிந்து பதறிப்போன திரையுலக பிரபலங்கள் நேரில் விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிச் சென்றனர். இந்நிலையில், மீரா விஜய் ஆண்டனியின் பள்ளியில் தனது பேத்தி படித்ததாகவும் இருவருக்கும் இடையே இருந்த நட்பு மீரா எப்படியான பொண்ணு தெரியுமா? உள்ளிட்ட தகவல்களை ஜெயந்தி கண்ணப்பன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா படித்த பள்ளி: விஜய் ஆண்டனி மகள் படித்த தனியார் பள்ளியில் தான் ஜெயலலிதாவே படித்தார் என்றும் அப்படிப்பட்ட பள்ளியில் படித்த மாணவி இப்படியொரு முடிவை எடுத்ததே அதிர்ச்சியாக உள்ளது. மீரா ஆண்டனி கேப்டனாக அந்த பள்ளியில் செயல்பட்டு வந்தார் என்றும் செம போல்டான பொண்ணு, என்னோட பேத்தி அவருக்கு ஒரு வருஷம் பெரிய கிளாஸ். கடந்த ஆண்டு பள்ளியை முடித்து விட்டார்.

Vijay Antony Daughter Meeras character and death reason talks by Jayanthi Kannappan

ஆனால், அதுவரை அவளுடன் பல நாட்கள் பழகியவர். நானே பலமுறை அந்த பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமாவுடன் வந்து அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என்றும் அவ்ளோ கைண்டான பெற்றோர்கள், அந்த பொண்ணு கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆடுவது, பாடுவது, இசை என அனைத்திலும் தனித்திறமையுடன் திகழ்ந்து வந்தா, ஆனால், இப்படியொரு முடிவை எடுப்பா என நினைக்கவில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

தோழிகளுக்கு டின்னர்: எப்போதுமே விஜய் ஆண்டனி வீட்டில் இருந்து அவரது தோழிகளுக்கு எல்லாம் உணவு வரும். பாத்திமா அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். தனது மகளை மட்டுமின்றி மத்த பசங்களையும் ரொம்பவே பாசமாக கவனித்து வந்தார்.

Vijay Antony Daughter Meeras character and death reason talks by Jayanthi Kannappan

சமீபத்தில், தனது தோழிகளை வீட்டுக்கு அழைத்து வந்து மீரா டின்னர் விருந்தும் கொடுத்திருந்தார். எப்போதுமே ஹேப்பியாக எதுக்குமே கவலைப்படாமல் பார்த்துக்கலாம் என நினைத்த அவர் மனசுக்குள் என்ன விதமான சோகத்தை வைத்துக் கொண்டு இப்படி இந்த உலகை விட்டு சென்று விட்டார் என்று தெரியவில்லை என பேசியுள்ளார் ஜெயந்தி கண்ணப்பன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X