Vijay Antony Daughter: விஜய் ஆண்டனி மகளுக்கு அந்த பிரச்சனை இருந்ததா?.. தோழிகள் சொன்னது என்ன?
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:00 மணி அளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
16 வயதான மீரா தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீரா தற்கொலை செய்து கொண்டிருப்பது ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்புவதாக நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீராவுக்கு மன அழுத்தம் இருந்ததா?: மீராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிற நிலையில், மீராவின் பள்ளி ஆசிரியை மற்றும் மீராவின் பள்ளி தோழிகள் உள்ளிட்டோர் மீரா ரொம்பவே போல்டான பொண்ணு, அவளுக்கு மன அழுத்தம் எல்லாம் கிடையாது என பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மீரா தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த தகவலை அறிந்ததும் பதறிப்போன அவரது தோழிகள் நேரடியாக மீராவின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். அப்போது அவர்களிடம் சில செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மீரா ரொம்பவே தங்கமான பொண்ணு அவள் உயிர் இழந்து விட்டால் என்பது தெரிந்தவுடன் இன்று பள்ளியில் அழுவாத நபர்கள் கூட அவருக்காக அழுதனர் என்றனர்.
பள்ளி தோழிகள் சொன்னது என்ன?: மேலும், மீராவுக்கு மன அழுத்தம் இருந்தது போன்ற எந்த ஒரு அறிகுறியும் எங்களுக்கு தெரியவே இல்லை என்றும் ஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தால் கூட எங்களால் முடிந்த ஆறுதலை அவளுக்கு அளித்திருப்போம். ஆனால் இப்படி எங்களை எல்லாம் அழ வைத்து விட்டு சென்று விட்டாள்.. என்ன ஆச்சு என்று தெரியவில்லை எனக்கு கூறி உள்ளனர்.
விஜய் ஆண்டனியின் மகள் மீராவுக்கு பள்ளியிலும் வீட்டிலும் அத்தனை பேர் ஆதரவாக உள்ள நிலையில், என்ன காரணத்திற்காக இப்படியொரு திடீர் முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது என்றும் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அப்பா அம்மாவிடம் குழந்தைகள் மனம் விட்டுப் பேசினால் தற்கொலை போன்ற கொடுமையான சம்பவத்தை தவிர்த்து விடலாம் என்றும் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











