Vijay Antony Daughter: ஸ்கூல்ல எந்த பிரச்சனையும் இல்லை.. மீராவின் பள்ளி ஆசிரியை சொன்னது என்ன?

சென்னை: சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நான் படத்தில் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வயது 16 இன்று அதிகாலை தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சோபா சந்திரசேகர், சந்தானம், உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜா, சித்தார்த், நடிகை ரித்திகா சிங், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் விஜய் ஆண்டனி வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியுள்ளனர்.

Vijay Antony Daughter School Teacher talks about Meeras mental health condition

சரத்குமார், சிம்பு, விஷால், இசையமைப்பாளர் அனிருத், இளம் நடிகர் கவின் உள்ளிட்ட பலர் ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மீராவின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது பள்ளி ஆசிரியை நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

12ம் வகுப்பு மாணவி: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சோகத்தில் பள்ளி ஆசிரியை: நல்ல போல்டான பொண்ணு, படிக்கிற விஷயத்துலலாம் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. டாப்பர் என்று சொல்ல முடியாது. அவரேஜான ஸ்டூடன்ட் தான். ஆனால், ஏன் இப்படியொரு முடிவை திடீரென எடுத்தார் என தெரியவே இல்லை. குழந்தை போயிடுச்சு இனிமே ஒண்ணூமே பண்ண முடியாது என மீராவின் ஆசிரியர் சோகத்தில் குமுறியபடி பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஸ்கூல்ல எந்த பிரச்சனையும் இல்லை: மேலும், பத்திரிகையாளர்கள் அந்த ஆசிரியரிடம், பள்ளியில் ஏதாவது பிரச்சனை நடந்ததா? என்றும் மாணவி மீரா படிப்பதில் ஏதும் மன அழுத்தத்தை சந்தித்தாரா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப, அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. எந்த பிரச்சனையும் இல்லை அவ ரொம்பவே போல்டான பொண்ணு, மன அழுத்தம் எல்லாம் இந்த வயதில் எப்படி வருதுன்னே தெரியல என மன வேதனையில் புலம்பியபடியே அங்கிருந்து கிளம்பி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X