Vijay Antony: நிறைய அடிவாங்கி மனசே மரத்துப்போச்சு.. மனம் வருந்தி பேசிய விஜய் ஆண்டனி!
சென்னை: காயப்பட்டு காயப்பட்டு மனசே மரத்துப்போச்சு என்று விஜய் ஆண்டனி ரத்தம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 6ந் தேதி வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி பேச்சு: சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, சின்ன வயதில் இருந்தே நிறைய விஷயத்தைப் பார்த்து இருக்கிறேன், நிறைய இழந்து இருக்கிறேன். ஒரு சிலர் தான் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் பாசிடிவாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். என்னுடைய குணம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்ப்பது.

மனசே மரத்துப்போச்சு: அதே போல நிறைய அடிவாங்கிக்கொண்டே இருந்தால், மரத்துப்போய்விடும் என்று சொல்லுவார்கள் அப்படித்தான் நிறைய காயம்பட்டு மனசு மரத்துப்போய்விட்டது. இந்த கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்று நான் நினைத்து பேசுகிறேன். அவை தான் இப்போது வைரலாகி இருக்கிறது. என்னைவிட பிலாசபர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். எந்த விஷயத்தையுயும் மறக்காதீங்க, வலியோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். அவைதான் மனதை பக்குவப்படுத்தும்
மனைவி உறுதுணையாக இருக்கிறார்: என்னுடைய மனைவி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். என்னை அவர் உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பார். நான் நடிக்கச் செல்கிறேன் என்று சொன்ன உடன் என்னை நம்பினது அவர்தான். என் மனைவிக்கு என் மீது அபார நம்பிக்கை உண்டு. எ.காட்டாக ஒரு விமானம் விபத்துக்கு உள்ளாகிறது என்றால், என்னோட புருஷன் உயிரோடுதான் இருப்பார் என்று சொல்லுவார். அவருக்கு நான் மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு.

ரத்தம் படத்தில்: ரத்தம் படத்தில் நான் ரிப்போர்ட்டராக நடித்து இருக்கிறேன். இந்த உலகம் மிகவும் கஷ்டமான உலகம். க்ரைம் ஜர்னலிசம் மிகவும் கடினமானது. காவல்துறையைத்தாண்டி வேலை செய்கிறவர்கள் அவர்கள்தான். காவல்துறையே சில நேரங்களில் இங்கே இருந்துதான் தகவல் எடுப்பார்கள் என்று விஜய் ஆண்டனி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











